விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘Baakiyalakshmi’ சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
‘Baakiyalakshmi’ சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா, கோபியிடம் ”இந்த குழந்தை உங்களுக்கு வேண்டாம்” என்று ஈஸ்வரி சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறாள். ”கோபிக்கு வளர்ந்த பசங்க இருக்காங்க… உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா… இந்த நேரத்துல நீ கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சா வீட்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க… அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று சொல்கிறார். ராதிகா ”இது என்னுடைய குழந்தை… இது வேணுமா வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நான்தான்… நீங்க சொல்றதுக்காகலாம் கலைக்க முடியாது” என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஈஸ்வரி நான் சொல்றத கேளுங்க என்று சொல்லியும் ராதிகா ”நான் எதுக்கு உங்க குடும்பத்தை பத்தி யோசிக்கணும்?” என கேட்க ”நீங்க புரியாம பேசுறீங்க… இந்த வீட்ல பெரியவங்கன்னு நாங்க இருக்கோம். நாங்களும் முடிவு பண்ணலாம்” என்று ஈஸ்வரி சொல்ல ராதிகா ”இந்த குழந்தையை நான் பெத்துக்கத்தான் போறேன்” என்று உறுதியாக சொல்லிவிடுகிறாள். நான் சொல்றத கொஞ்சம் கேளு என்று ஈஸ்வரி திரும்ப திரும்ப சொல்ல ”அன்னைக்கு அமிர்தாவுக்கும் எழிலுக்கும் மட்டும் வாழ்க்கையில ஒரு பிடிப்பு வேணும்… அதுக்கு ஒரு குழந்தை பெத்துக்குங்கன்னு சொன்னீங்க… அதே மாதிரி எங்களுக்குள்ள ஒரு பிடிப்பு வேணாமா” என கேள்வி கேட்கிறாள்.

ரெண்டு பேரும் கோபியை பிடித்து என்ன சும்மா நிக்கிற என்று கேள்வி கேட்க கோபி பதில் பேச முடியாமல் இருக்கிறான். உங்களுக்கு நாங்க இந்த வீட்ல இருக்கிறது தான் பிரச்சனைனா நாங்க வீட்டை விட்டு வெளியே போயிடுவோம் என்று ராதிகா சொல்கிறாள். இத பத்தி திரும்பவும் பேசாதீங்க அப்புறம் நான் ஏதாவது சொல்லிடுவேன் பேசாம வெளியே போயிடுங்க என்று சொல்லி ஈஸ்வரியை வெளியே அனுப்புகிறாள் ராதிகா.
இதனால் ஈஸ்வரி உடைந்து போய் வெளியே வர கோபி ராதிகா முறைப்பதை பார்த்து பின்னாடியே ஓடிவர ஈஸ்வரி கோபியிடம் ”போய் உன் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சிக்கிட்டு சுத்து” என சொல்லிவிட்டு கீழே வருகிறார். ஈஸ்வரி உடைந்து போய் உட்கார பாக்யா தண்ணீர் கொடுத்து அவரிடம் பேச ராதிகா விஷயத்தை சொல்ல முடியாமல் ஈஸ்வரி தவிக்க பாக்கியா ராதிகா கர்ப்பம் என்பது எனக்கு தெரியும் என சொல்லி அதிர வைக்கிறார். செல்வியும் இதை கேட்டு ஷாக் ஆகிறாள். செல்வி இவங்களுக்கெல்லாம் அசிங்கமாவே இல்லையா என்று கேட்க சரி நீ போய் உன் வேலையை பாரு என அனுப்புகிறார்.

எப்படி நீ இதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க?இது நல்லாவா இருக்கு என்று கேட்க மத்தவங்க வாழ்க்கையில கருத்து சொல்ற இடத்தில நான் இல்ல என்று பாக்கியா சொல்கிறார். நீங்க இத பத்தி எல்லாம் யோசிக்காதீங்க உங்க உடம்பு ரொம்ப முக்கியம் என்று சொல்லிவிட்டு எழுந்து வருகிறார். பாக்யா, ஈஸ்வரி பேசிய விசயத்தை கேட்டு செல்வியும் அதிர்ச்சியடைகிறார்.
பிறகு கோபி ரூமுக்கு செல்ல ராதிகா ”எனக்கு இந்த குழந்தை வேணும்… யார் என்ன சொன்னாலும் நான் இந்த குழந்தையை பெத்து வளக்கத்தான் போறேன்… கூடிய சீக்கிரம் இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் நான் கர்ப்பம்ன்ற விஷயத்தை நீங்க சொல்லணும்” என்று செக் வைக்க கோபி நாளைக்கு சொல்லிடுறேன் என்று கூறுகிறார்.
அடுத்ததாக பாக்கியா மொட்டை மாடியில் துணி மடித்து கொண்டிருக்கிற செல்வி உண்மையாகவே ராதிகா கர்ப்பமாவா இருக்கா என்று கேட்கிறார். எப்படிக்கா இது எல்லாம் தாங்கிக்கிட்டு இருக்க என்று கேள்வி கேட்க என் வாழ்க்கைல அவர் யாரோவோ ஆகிட்டார்…. அப்படி இருக்கும்போது நான் எதுக்கு கவலைப்படணும் என்று பாக்கியா சொல்ல செல்வி என்னதான் இருந்தாலும் நீ ஒரு பொண்ணுதானே… 25 வருஷம் அவரோட வாழ்ந்திருக்க அப்படி இருக்கும்போது அவர் இப்போ இதே வீட்ல வேற ஒரு பொண்ணோட வாழறது இல்லாம ஒரு குழந்தையை கெடுத்துக்க போறது பார்த்தா உனக்கு கோபம் வரலையா என்று கேட்கிறார்.
நானா இருந்திருந்தால் என் புருஷனுக்கு விஷத்தை வெச்சி இருப்பேன் என்று சொல்ல பாக்கியா எப்போ ஹாஸ்பிட்டலில் அவங்களை ஒண்ணா பார்த்தேனோ… அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்ப என் வாழ்க்கையில அவர் யாரோன்னு ஆகிட்டாரு என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]