ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘Dance Jodi Dance – Reloaded 3’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஆடிஷன் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஆடிஷன் விவரங்களை வெளியிட்டுள்ளது ஜீ தமிழ்.
Dance Jodi Dance – Reloaded
2016 ஆம் ஆண்டு ஜீ தமிழில் லான்ச் செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி Dance Jodi Dance. இதில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நடன துறையில் சாதிக்க நினைக்கும் கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. 2020ல் கொரோனா பரவல் காரணமாக மூன்றாவது சீசன் இறுதி போட்டியின்றி கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் புதுப் பொலிவுடன் 2022 ல் தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் “Dance Jodi Dance – Reloaded”. இதற்கு முன் நடைபெற்ற சீசன் மற்றும் தற்போது புதிய பரிமாணத்தில் ஒளிபரப்பாகும் சீசன் என அனைத்திலும் நடுவராக நடிகை சினேகா பங்கேற்றுள்ளார். இவருடன் நடிகை சங்கீதா மாற்றும் பாபா மாஸ்டரும் இணைந்துள்ளனர்.
Hello திண்டுக்கல் மக்களே…!!! Dance Jodi Dance Reloaded 3 Auditions வந்தாச்சு…!!!🥳
— Zee Tamil (@ZeeTamil) December 30, 2024
Dance Jodi Dance Reloaded 3 Audition.
Audition on 1st January Wednesday at Dindigul from 10 AM onwards#DanceJodiDance #DanceJodiDanceReloaded3 #DJD #Dindigul #Zeetamil pic.twitter.com/fcHW82zEjn
“Dance Jodi Dance – Reloaded 3” – ஆடிஷன் விவரங்கள்
இடம் | மாவட்டம் | நாள் | நேரம் |
SDFX டான்ஸ் ஸ்டுடியோ, 189/2A, வள்ளி விலாஸ், பாரதி ரோடு | கடலூர் | டிசம்பர் 30, 2024 | காலை 10 மணி முதல் |
S டான்ஸ் அகாடமி, காலேஜ் ரோடு, அழகப்பா நகர் | காரைக்குடி | டிசம்பர் 30, 2024 | காலை 10 மணி முதல் |
பெற்றோர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, காடம்பாடி, சந்தன மாரியம்மன் கோவில் அருகில் | நாகப்பட்டினம் | டிசம்பர் 31, 2024 | காலை 10 மணி முதல் |
பாரதி மியூசிக் அகாடமி, 41 காருண்யா நகர், உழவர் சந்தை அருகே | சிவகங்கை | டிசம்பர் 31, 2024 | காலை 10 மணி முதல் |
சில்வர் ஸ்டெப்பேர்ஸ் டான்ஸ் மற்றும் பிட்னஸ் கிளாஸ்,நெ 01, வேலுச்சாமி 2வது தளம், கலக்டரேட் எதிரில் | திண்டுக்கல் | ஜனவரி 1, 2025 | காலை 10 மணி முதல் |
ஸ்ரீ அபிநயாஸ் கலை குழுமம், 30.எல்.பி.எஸ்.ரோடு,அனுமன் குளம் சாலை | கும்பகோணம் | ஜனவரி 1, 2025 | காலை 10 மணி முதல் |
கிரேஸ் மியூசிக் அகாடமி,No.115, RMS காலனி, நாஞ்சிக்கோட்டை | தஞ்சாவூர் | ஜனவரி 2, 2025 | காலை 10 மணி முதல் |
ஃப்ளை ஓவர் நடன பள்ளி, 10, ஆம்ஸ் நடராஜன் வளாகம், பள்ளி ஓடை தெரு, மேற்கு காட்ஸ் அருகில் | தேனி | ஜனவரி 3, 2025 | காலை 10 மணி முதல் |
ஸ்டேப் அப் டான்ஸ் ஸ்டுடியோ 4வது ஸ்டண்ட், திலகர் திடல், வடார் சாந்தா, பிருந்தாவன் | புதுக்கோட்டை | ஜனவரி 3, 2025 | காலை 10 மணி முதல் |
ARR டான்ஸ் ஸ்டுடியோ, 167 மூன்றாம் தளம், வல்லினம் அபார்ட்மெண்ட், கோவை பிரதான சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், ஆல்வின் நகர் | கரூர் | ஜனவரி 4, 2025 | காலை 10 மணி முதல் |
ஆராதனா இசைப்பள்ளி, 10/315 காளியாப்பிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்கு தெரு, எஸ்.கே.எஸ்.ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ் | சேலம் | ஜனவரி 6, 2025 | காலை 10 மணி முதல் |
விஷ்ராந்தி ஜென் யோகா ஸ்டுடியோ,2/2பு தென்றல் நகர், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகில், ஸ்ரீனிவாசம் நகர் | திருநெல்வேலி | ஜனவரி 7, 2025 | காலை 10 மணி முதல் |
சிவாலயா டான்ஸ் ஸ்டுடியோ,3வது தளம், கனரா வங்கி கட்டிடம், பரமத்தி சாலை, எஸ் பி புதூர், தில்லைபுரம் | நாமக்கல் | ஜனவரி 7, 2025 | காலை 10 மணி முதல் |
ட்விஸ்டர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் டான்ஸ் அகாடமி,பிரியண்ட் நகர் – 4வது தெரு கிழக்கு (HAP டெய்லிக்கு அருகில்) | தூத்துக்குடி | ஜனவரி 8, 2025 | காலை 10 மணி முதல் |
- 18 வயதிற்கு மேல் உள்ள நபர் இந்த ஆடிஷனில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள்
- ஆடிஷன் நடைபெறும் இடத்திற்கு ஆண்/பெண் யாராக இருப்பினும் அவர்களின் புகைப்படம் மற்றும் வயதை உறுதி செய்யும் சான்றுகளுடன் செல்ல வேண்டும்.
- மேலும் விபரங்களுக்கு 9994704655 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.