“கோலங்கள், மெட்டி ஒலி, அல்லி ராஜ்ஜியம், பொக்கிஷம் சித்திரம் பேசுதடி” போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய பிரபலம் அடைந்த நடிகர் மற்றும் இயக்குனர் ஆன திருச்செல்வம், 2022-2024 ஆம் ஆண்டு வரை Sun TV-யில் ஒளிபரப்பான “Ethirneechal” என்ற மெகாத்தொடரை இயக்கினார்.
Ethirneechal 1 – மையக்கரு
ஆண் ஆதிக்கம் கொண்ட ஒரு குடும்பத்தில் ஜனனி என்ற இளம் பெண் காலச் சூழ்நிலையால் மருமகளாக சென்று அங்கு பெண்களை அடிமை போல் நடத்தும் தனது குடும்பத்தை எவ்வாறு சமாளிக்கிறாள், அவர்களை எதிர்ப்பதால் ஏற்படும் இன்னல்கள் என்னென்ன என்பதே இந்த தொடரின் மையக்கரு.
இதில் “ஆதி குணசேகரன்” என்ற மாமனார் கதாபாத்திரம் தான் இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைய காரணம். ஆதி குணசேகரனாக வாழ்ந்த மறைந்த திரைப்பட நடிகர் ஜி.மாரிமுத்து, மற்றும் அவரின் iconic வசனம் ஆன “ஏம்மா ஏய்” இன்றும் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் ஆக உலா வருகிறது.
ஜூன் மாதம் இந்த தொடரின் ஒளிபரப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த பாகம் எப்போது என்ற ரசிகர்களின் கேள்வி Sun TV தொலைக்காட்சியின் ஊடக பக்கங்களில் உள்ள comment box-ல் அதிகம் பதிவிடப்பட்டது.
Ethirneechal 2 – டிசம்பர் 23 முதல்!
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திடீர் என ‘Ethirneechal 2’-வின் டீசரை வெளியிட்டது Sun TV. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள். இதில் முந்தைய சீசனில் ஈஸ்வரி, ரேணுகா, மற்றும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த கனிகா, பிரியதர்ஷினி, மற்றும் ஹரிப்ரியா மீண்டும் அதே கதாபாத்திரத்தில் வருவது போல் டீசர் அமைந்துள்ளது.
‘ஜனனி’ என்ற கதாநாயகியின் கதாபாத்திரத்தில் Sun TV தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான பார்வதி வெங்கிடராமன் புதிதாக வருகை தரவுள்ளார். இவர் ஜீ தமிழில் நடிகை தேவயானி நடித்த “புது புது அர்த்தங்கள்” என்ற மெகா தொடரில் பவி என்ற மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புத்தம் புதிய ‘Ethirneechal 2’ இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் Sun TV தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 23 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகப்போகிறது. இதை குறித்த ப்ரோமோ ‘Ethirneechal 2’ தொடரின் theme பாடலுடன் வெளியானது.
This is not just a song, but an emotion 🥺❤
— Sun TV (@SunTV) December 19, 2024
ETHIRNEECHAL THODARGIRATHU | FROM DEC 23 | MON-SUN | 9:30 PM#SunTV #Ethirneechal #EthirneechalOnSunTV #Serials #TamilSerials #EthirneechalTitleSong #SunDigital pic.twitter.com/FMeEqRied3