Home Television இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

ஒவ்வொரு வாரமும் Tamil Serial-கள் பல திருப்பங்கள், பரபரப்புகள் என TRP ரேட்டிங்கில் ஏற்ற இறக்கம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.

by Sudhakaran Eswaran

ஒவ்வொரு வாரமும் Tamil Serial-கள் பல திருப்பங்கள், பரபரப்புகள் என TRP ரேட்டிங்கில் ஏற்ற இறக்கம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo:

Siragadikka Aasai serial

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.38 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு TRP ரேட்டிங் அதிகரித்து முதலிடத்திற்கு வந்துள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். நகையை யார் எடுத்திருப்பார் என கண்டுபிடிக்க திட்டமிடுவது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.27 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். விறுவிறுப்பான promo வெளியானது  இந்த வாரம்.

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.08 TRP புள்ளிகள் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயலின் கல்யாணத்திற்கு பிறகு பல திருப்பங்கள் கொண்ட இந்த வார ப்ரோமோ.

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 7.89 TRP ரேட்டிங் கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. விறுவிறுப்பான ப்ரோமோ கொண்டு இந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.50 TRP புள்ளியில் 5-வது இடத்தில் உள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.12 TRP புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். TRP ரேட்டிங்கில் அதிகரித்துள்ளது இந்த வாரம்.

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.80 TRP புள்ளியில் 7-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP குறைந்துள்ளது மல்லி சீரியல். 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.77 TRP புள்ளிகள் கொண்டு 8-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். சுவாரஸ்யம் நிறைந்த promo வீடியோ.

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.28 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP ரேட்டிங்கில் குறைந்துள்ளது சுந்தரி சீரியல். 

சின்ன மருமகள்:

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. நவீன் குமார், சுவேதா முக்கியமாக கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 5.72 TRP ரேட்டிங் கொண்டு 10-வது இடத்தில உள்ளது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.