Home Television ஜூலை 3வது வாரம் TRP Rating – அதிரடி காட்டும் Vijay TV!

ஜூலை 3வது வாரம் TRP Rating – அதிரடி காட்டும் Vijay TV!

ஜூலை 3வது வாரம் Tamil Serial TRP Ratingல் வழக்கம்போல் முதல் 3 இடம் பிடித்திருக்கிறது Vijay TVன் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

by Sruthi Balasubramanian

தொலைக்காட்சி சேனல்களுக்கான இந்த வார TRP Rating இன்று வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் டிவியின்  சிறகடிக்க ஆசை சீரியல் மிக அதிகபட்ச ரேட்டிங்கைத் தொட்டிருப்பதோடு, விஜய் டிவியின் 5 சீரியல்கள் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கின்றன.

TRP POSITIONSERIAL NAMETRP RATING
1.சிறகடிக்க ஆசை10.32 TRP
2.பாக்கியலட்சுமி8.69 TRP
3.பாண்டியன் ஸ்டோர்ஸ் 28.10 TRP
4.சிங்கப்பெண்ணே7.32 TRP
5.கயல்7.01 TRP
6.சின்ன மருமகள்6.98 TRP
7.மருமகள்6.82 TRP
8.ஆஹா கல்யாணம்6.60 TRP
9.வானத்தைப்போல6.32 TRP
10.மல்லி6.21 TRP

1. சிறகடிக்க ஆசை – 10.32 TRP

விஜய் விடியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை இந்த வார ரேட்டிங்கில் மிக அதிகபட்சமாக 10.32 என்கிற TRP ரேட்டிங் பெற்றிருக்கிறது.

2. பாக்கியலட்சுமி – 8.69 TRP

அதே விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி 8.69 ரேட்டிங்கைப் பெற்று 9 TRP ரேட்டிங்கை நெருங்கிவருகிறது.

3. பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 – 8.10 TRP

ஆரம்பத்தில் சரியாகப்போகத பாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் பழைய சீசன் 1 போல ரசிகர்களுக்குப் பிடித்த சீரியலாக மாறிவருவதன் அடையாளமே 8 ப்ளஸ் ரேட்டிங்கைத் தொட்டிருப்பது.

TRP ரேட்டிங்/ Pandian Stores

4. சிங்கப்பெண்ணே – 7.32 TRP

சன் டிவியின் பவர்ஃபுல் ஷோவாக இருந்த ‘சிங்கப்பெண்ணே’ தொடர்ந்து சரிந்துவருகிறது. கடந்த வாரம் 7.49 என்கிற ரேட்டிங்கில் இருந்த சிங்கப்பெண்ணே இந்த வாரம் 7.32 என குறைந்துவிட்டது மட்டுமல்ல தொடர்ந்து குறைந்துவருகிறது.

5. கயல் – 7.01 TRP

சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்தவாரமும் குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் 10 ப்ளஸ் ரேட்டிங்கில் இருந்த கயல் இந்தவாரம் 7 என்கிற பார்டர் ரேட்டிங்கிற்கு வந்துவிட்டது.

6. சின்ன மருமகள் – 6.98 TRP

விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்தாவரம் 7 ரேட்டிங்கை நெருங்கியிருக்கிறது சின்ன மருமகள்

7. மருமகள் – 6.82 TRP

சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மருமகள் தொடர் 6.82 என ரேட்டிங்கில் தொடர்ந்து பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது.

8. ஆஹா கல்யாணம் – 6.60 TRP

விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் இந்த வாரம் 6.60 ரேட்டிங்கோடு எட்டாவது இடம் பிடித்திருக்கிறது.

Aaha Kalyaanam Poster

9. வானத்தைப்போல – 6.32 TRP

சன் டிவியின் வானத்தைப்போல சீரியலின் டிஆர்பி குறைந்துகொண்டே போனாலும் தொடர்ந்து டாப் 10-க்குள் வந்துவிடுகிறது.

10. மல்லி – 6.21 TRP

சன் டிவியில் ஒளிபரப்பாகு ‘மல்லி’ இந்தவாரம் 6.21 என்கிற ரேட்டிங்கோடு கடைசி இடத்தைப்பிடித்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.