Home Television ஜூலை இறுதி வாரத்தின் TRP Rating! வழக்கம்போல் முன்னணியில் Vijay TV!!

ஜூலை இறுதி வாரத்தின் TRP Rating! வழக்கம்போல் முன்னணியில் Vijay TV!!

ஜூலை இறுதி வாரத்தின் தமிழ் சீரியல் TRP Rating வெளியானது! டாப் 3 இடத்தில் மீண்டும் விஜய் டிவி!

by Sruthi Balasubramanian

ஜூலை கடைசி வாரத்திற்கான தமிழ் சீரியல் TRP Rating தற்போது வெளியாகி உள்ளது! இதில் வழக்கம்போல் முதல் 3 இடங்களை பிடித்து TRPஇல் டாப்பில் உள்ளது விஜய் டிவி. தொடர்ந்து சரிவை சந்திக்கிறது சன் டிவி. முக்கியமாக 9 மணி ஸ்லாட்டில் உச்ச TRP Ratingஐ தொட்டு சீரியல் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளனர் விஜய் தொலைக்காட்சி!!

TRP POSITIONSERIAL NAMETRP RATING
1சிறகடிக்க ஆசை11.27 TRP
2பாக்கியலட்சுமி9.91 TRP
3பாண்டியன் ஸ்டோர்ஸ் 28.29 TRP
4கயல்7.59 TRP
5சிங்கப்பெண்ணே7.24 TRP
6மருமகள்6.98 TRP
7ஆஹா கல்யாணம்6.92 TRP
8சின்ன மருமகள்6.72TRP
9 மல்லி6.57 TRP
10சுந்தரி6.51 TRP

விகடன் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர், இந்த வாரம் உச்சபட்சமாக 11.27 TRP Rating பெற்று மீண்டும் முதலிடம் வகித்து, தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது விஜய் டிவி. அடுத்த இரண்டு இடங்களையுமே விஜய் டிவியின் சீரியல்களே பிடித்திருக்கின்றன. பாக்கியலட்சுமி கடந்த வாரம் 8.69 ரேட்டிங் பெற்றிருந்த நிலையில் இந்தவாரம் 9.91 TRP Rating பெற்று இரண்டாம் இடம்பிடிக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 கடந்தவாரத்தைக் காட்டிலும் முன்னேறி 8.29 TRP புள்ளிகள் பெற்றிருக்கிறது.

TRP Rating Pandian Stores
Source – Hotstar

சன் டிவியின் ‘கயல்’ 7.59 ரேட்டிங்குடன் ‘சிங்கப்பெண்ணே’வை முந்தியடித்து நான்காவது இடத்தில் உள்ளது. மீண்டும் 9 மணி ஸ்லாட்டில் சரிவை சந்தித்து 7.24 TRP உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது சிங்கப்பெண்ணே. ஆறாவது இடத்தில் சன் டிவியின் 8 மணி சீரியலான மருமகள் 6.98 ரேட்டிங்கோடு இருக்க, ஏழாவது இடத்துக்கு ஆஹா கல்யாணம் 6.92 ரேட்டிங்கோடு வந்திருக்கிறது. விஜய் டிவியின் 9.30 மணி சீரியலான சின்ன மருமகள் கடந்த வாரத்தைவிடக் கொஞ்சம் குறைந்திருந்தாலும் 6.72 டிஆர்பி உடன் எட்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. இதே நேரத்துக்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் மல்லி 6.57 ரேட்டிங்கோடு ஒன்பதாவது இடத்திலும், சன் டிவியின் சுந்தரி 6.51 ரேட்டிங்கோடு கடைசி இடத்தையும் பிடித்திருக்கின்றன.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.