Home Television பரபரப்பான, சுவாரசியம் நிறைந்த ப்ரோமோவுடன் இந்த வார Tamil Serial Promo-கள் 

பரபரப்பான, சுவாரசியம் நிறைந்த ப்ரோமோவுடன் இந்த வார Tamil Serial Promo-கள் 

தமிழ் SERIAL-களின் TRP-யுடன் இந்த வார ப்ரோமோ VIDEO-கள் 

by Sudhakaran Eswaran

தமிழ் SERIAL-களின் TRP-யுடன் இந்த வார ப்ரோமோ VIDEO-கள் 

2024-ஆம் ஆண்டில் பாதி ஆண்டின் முடிவில் பல புது Tamil Serial-கள்  வந்த வண்ணம் உள்ளன. ஒரு சில சீரியல்கள் முடிவுறும் நிலையில் இருந்து வருகின்றன. அந்த வகையில் 21-வது வாரத்தில் ஒவ்வொரு சீரியலும்  இடத்தில் இருந்து வருகிறது என்பதை பார்க்கலாம். 

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.76 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது.மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். குடும்பத்தை மறந்து திருமணம் செய்து கொள்வாரா ஆனந்தி?. பொறுத்திருந்து பார்க்கலாம். விறுவிறுப்பான promo வெளியானது  இந்த வாரம்.

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.66 TRP புள்ளிகள் கொண்டு இரண்டாவதாக உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயலின் நிச்சயதாரத்தை நிறுத்த நினைக்கும் கயலின் பெரியம்மா. கோபமடைந்த கயல் என இந்த வார promo வெளியானது. 

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.80 TRP புள்ளிகள் கொண்டு 3-வது  இடத்தில உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரோகிணி தான் தனது அம்மா என கிரிஷ்க்கு தெரியவர பாசத்தை ரோகிணி செய்யும் செயல் என இந்த வார  PROMO. 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. துளசிக்கு என்னாச்சு திடீரென மயங்கி விழுந்த துளசி. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.37 TRP புள்ளியில் 4-வது இடத்தில் உள்ளது. 

எதிர்நிச்சல் சீரியல்:

2022-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தில் 7.11 TRP புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை போன்றவர்கள் முக்கியமானவர்கள். குணசேகரனை கைது செய்தனர்.அடுத்து என்ன நடக்கும் பார்க்கலாம்.

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.93 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.82 TRP புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.  

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.54 TRP புள்ளிகள் கொண்டு 8-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 5.85 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. 

ஆஹா கல்யாணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த வாரம் டாப் 10 லிஸ்டில் இல்லாத நிலையில் முதல் முறையாக 10-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் 5.61 TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.