மகளிர் தினமானது, பெண்களின் பெருமைகளையும், சாதனைகளையும், பலத்தையும் கொண்டாடும் சிறந்த நாளாகும். தற்போதைய கால கட்டத்தில் பெண்கள் குடும்பம், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் முன்னேறி வருகின்றன. அத்தகைய பெண்களின் பெருமையை கொண்டாடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அத்தகைய சிறப்பான நாளை மேலும் சிறப்பிக்க பெண்களின் பெருமைகளையும் பெண் சுதந்திரத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு சில திரைப்படங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாத எண்டெர்டைன்ட்மெண்ட் உடன் காணும் வகையில் Zee Thirai யில் ஒளிபரப்பாகவுள்ளது. எந்தெந்த படங்கள் எந்தெந்த நேரங்களில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதையும் படத்தின் சிறிய விளக்கத்தையும் பின்வருவனவற்றில் காணலாம்.
✨மார்ச் 8ஆம் தேதி WOMEN'S DAY🦸♀️💃 முன்னிட்டு
— Zee Thirai (@zeethirai) March 1, 2025
காலையில இருந்து இரவு வரை 🦸♀️Women's Day Special Movies ah பார்த்து பெண்ணின் பெருமையை கொண்டாடுவோம்!😍🥳
06:00 AM | MOM
08:00 AM | MISS INDIA
10:00 AM | DORA
12:00 PM | JAWAN
03:00 PM | NERKONDA PAARVAI
06:00 PM | DANNY
08:00 PM | DHIYA pic.twitter.com/GPao3BuGcy
1. மாம்
நடிகை ஸ்ரீதேவி முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த உணர்வுப்பூர்வமான திரில்லர் திரைப்படம். தன் மகளுக்காக போராடும் ஒரு தாயின் கதையை மையமாகக் கொண்ட மாம் படம் 7 ஜூலை 2017 அன்று வெளியானது.
- இயக்குனர் – ரவி உதயவர்
- நடிகர்கள் – ஸ்ரீதேவி, அக்ஷய் கண்ணா, நவாஜுதீன் சித்திகி, சஜல் அலி, அத்னான் சித்திகி
- வெளியீட்டு தேதி – 7 ஜூலை 2017
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 6 AM.
2. மிஸ் இந்தியா
கனவுகள் கொண்ட ஒரு பெண் எப்படி தனி முயற்சி, விடாமுயற்சியினால் உலகளவில் பெரிய ஆளாக வளர்க்கிறார் என்பதையும், பெண்ணின் சுய மரியாதையை விளக்கும் கதையாகவும் உள்ள படம் ‘மிஸ் இந்தியா’.
- இயக்குனர் – நரேந்திர நாத்
- நடிகர்கள் – கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா, நவீன் சந்திரா.
- வெளியிட்டு தேதி – 4 அக்டோபர் 2020
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 8 AM.
3. டோரா
ஒரு மர்மமான பழைய காருடன் சம்பந்தப்பட்ட அதிரடி திகில் திரைப்படம்.திகில், மர்மம் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான நடிப்பை கொண்டது ‘டோரா’ திரைப்படம்.
- இயக்குனர் – தாஸ் ராமசாமி
- நடிகர்கள் – நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா
- வெளியீட்டு தேதி – 31 மார்ச் 2017
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 10 AM.
4. ஜவான்
நயன்தாரா முன்னணி கதாபாத்திரமான ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அதிரடியான ஆக்ஷன் திரைப்படம் ‘ஜவான்’.
- இயக்குனர் – அட்லீ
- நடிகர்கள் – ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன்.
- வெளியீட்டு தேதி – 7 செப்டம்பர் 2023
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 12 PM.
5. நேர்கொண்ட பார்வை
மூன்று பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்ட படம். இப்படத்தில் நடிகர் அஜித் ஒரு தீவிரமான வழக்கறிஞராக நடித்து, பெண்களின் உடல் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கான சுதந்திரத்தை மையமாகக் கொண்ட படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’
- இயக்குனர் – H. வினோத்
- நடிகர்கள் – அஜித், வித்யா பாலன், ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம்.
- வெளியீட்டு தேதி – 8 ஆகஸ்ட் 2019
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 3 PM
6. டேனி
வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டேனி’ திரைப்படம், ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான விசாரணை சார்ந்த கதையாகவுள்ளது.
- இயக்குனர் – எல்.சி. சந்தனமூர்த்தி
- நடிகர்கள் – வரலட்சுமி சரத்குமார், சயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத், கவின்.
- வெளியீட்டு தேதி – 1 ஆகஸ்ட் 2020
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 6 PM.
7. தியா
சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தியா படம், தாய்மையின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு திரில்லர் நிறைந்த திரைப்படம்.
- இயக்குனர் – ஏ.எல். விஜய்
- நடிகர்கள் – சாய் பல்லவி, நாகா ஷௌர்யா, வெரோனிகா அரோரா.
- வெளியீட்டு தேதி – 27 ஏப்ரல் 2018
- ஒளிபரப்பு தளம் – Zee Thirai
- ஒளிபரப்பு நாள் & நேரம் – 8 மார்ச் 2025, 8 PM.
ஒளிபரப்பு விவரங்கள்
திரைப்படம் | நாள் | நேரம் |
மாம் | 8 மார்ச் 2025 | 6 AM |
மிஸ் இந்தியா’ | 8 மார்ச் 2025 | 8 AM |
டோரா | 8 மார்ச் 2025 | 10 AM |
ஜவான் | 8 மார்ச் 2025 | 12 PM |
நேர்கொண்ட பார்வை | 8 மார்ச் 2025 | 3 PM |
டேனி | 8 மார்ச் 2025 | 6 PM |
தியா | 8 மார்ச் 2025 | 8 PM |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]