Home Television முன்னேறும் ‘சிறகடிக்க ஆசை’… இந்த வார TRP டாப் 10!!

முன்னேறும் ‘சிறகடிக்க ஆசை’… இந்த வார TRP டாப் 10!!

தொலைக்காட்சி சேனல்களின் பர்ஃபாமென்ஸை சொல்லும் இந்த ஆண்டின் 20-வது TRP வார ரேட்டிங் இன்று காலை வெளியானது.

by Santhiya Lakshmi

தொலைக்காட்சி சேனல்களின் பர்ஃபாமென்ஸை சொல்லும் இந்த ஆண்டின் 20-வது TRP வார ரேட்டிங் இன்று காலை வெளியானது. இதில் வழக்கம்போல விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ முதலிடம் பிடித்திருப்பது மட்டுமல்ல விறுவிறுவென 1 டிஆர்பி ரேட்டிங் முன்னேறி 9.52TRP புள்ளிகள் பெற்றிருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’. கடந்த வாரம் இதன் ரேட்டிங் 8.32 என்கிற ரேட்டிங்கில் இருந்தது. ஒரே வாரத்தில் ‘சிறக்கடிக்க ஆசை’ இவ்வளவு புள்ளிகள் முன்னேறியிருப்பது மட்டுமல்ல, ஐபிஎல் நேரத்தில் இப்படி ஒரு பாய்ச்சல் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த ‘சிங்கப்பெண்ணே’வை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது விஜய் டிவியின் ‘பாக்யலட்சுமி’. இந்த வாரம் 8.93 ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது ‘பாக்யலட்சுமி’. மூன்றாவது இடத்தை சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கயல்’ பிடித்திருக்கிறது. ‘கயல்’ கடந்தவாரம் 7.48 புள்ளிகளுடன் இருந்த நிலையில் இந்தவாரம் 8.04 புள்ளிகள் பெற்றிருக்கிறது. சன் டிவியின் ‘சிங்கப்பெண்ணே’ 7.87 TRP பெற்று நான்காம் இடம் பிடித்திருக்கிறது. விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ 7.40 புள்ளிகளுடன் ஐந்தாம் இடம் பிடிக்க, ஆறாம் இடத்துக்குப்பின் தங்கியிருக்கிறது சன் டிவியின் பிரபல சீரியலான ‘எதிர் நீச்சல்’. இது இந்த வாரம் கடந்த வாரத்தைக்காட்டிலும் குறைவாக 7.61 TRP-யில் இருந்து 7.26 ஆக குறைந்திருக்கிறது.

‘வானத்தைப்போல’ சீரியல் 6.67TRP புள்ளிகளுடன் ஏழாம் இடம் பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தை விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ பிடித்திருக்கிறது. இதன் டிஆர்பி 6.59 புள்ளிகள். சன் டிவியின் சுந்தரி 6.45 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் 6.08 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

எதிர் விமர்சனங்களையும் மீறி சன் டிவி தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கும் ‘ராமாயணம்’ சீரியல் 4.85 TRP புள்ளிகள் பெற்றிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.