இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் பல திரைப்பட ரசிகர்கள் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை காண ஆவலுடன் இருக்கும் நிலையில், பல ரசிகர்கள் தங்களின் விருப்ப நடிகர் நடிகைகளின் படங்களை சின்னத்திரையில் காண காத்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “New Year 2025” இந்த புத்தாண்டு தினத்தன்று பல தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரையில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது.
2025 புத்தாண்டு திரைப்படங்களின் பட்டியல்
படம் | தொலைக்காட்சி | ஒளிபரப்பு நேரம் | நடிகர்கள் |
லப்பர் பந்து/Lubber Pandhu | விஜய் டிவி | காலை 11.30 | ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, |
பிரதர்/Brother | ஜீ தமிழ் | மதியம் 3 | ஜெயம் ரவி, பிரியங்கா மோகனன், பூமிகா, சரண்யா, VTV கணேஷ் |
சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் இதுவரை அதிகாரபூர்வமாக புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அனுமானிக்கப்பட்ட திரைப்படங்கள்,
1.Bloody Beggar
நடிகர் கவின் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாக்கப்பட்ட பிளாக் காமெடி திரைப்படம் “Bloody Beggar” திரைப்படம் சன் டிவியில் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.தி கோட்/The GOAT
ஜீ தமிழ் தொலைக்காட்சி அவர்களது அதிகாரப்பூர்வ சமூக தளங்களில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘The Goat’ விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட உள்ளது. ஆனால் புத்தாண்டு/பொங்கல் சிறப்பு திரைப்படமா என்ற சந்தேகம் இன்று வரை நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் அதற்கான விடை கிடைத்துவிடும்.
3.லால் சலாம்
பல நாட்களாக ottயில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘லால் சலாம்’ இந்த புத்தாண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
4.Black
ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் திரையில் வெகுவாக கொண்டாடிய sci-fi திரைப்படமான “Black” படத்தின் satellite உரிமம் விஜய் டிவி பெற்றுள்ள நிலையில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.