புது வருடம் தொடங்கிய உடனே பொங்கல் திருநாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஒரு வார விடுமுறை பலரின் எக்சைட்மென்ட் அளவை இமயத்தை தாண்டும் அளவிற்கு செய்துவிட்டது. ஆகையால், ஸ்பெஷல் ஆன இந்த விடுமுறை நாளை சிறப்பாக செலவிட திரையரங்கு மட்டுமல்ல உங்கள் வீட்டின் சின்னத்திரையும் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால், “Pongal 2025” (ஜனவரி 14-16 வரை) நாட்களில் பல புது திரைப்படங்கள் பிரீமியர் ஆகவுள்ளது. அதன் பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள்.
விஜய் டிவி
2024 ஆம் ஆண்டில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகச் சிறந்த பாராட்டுகளை பெற்ற தமிழ் திரைப்படங்கள் satellite உரிமத்தை பெற்று தங்களின் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளது விஜய் டிவி.
திரைப்படம் | நாள் | நேரம் |
அமரன் | ஜனவரி 14, 2025 | மாலை 5.30 |
மெய்யழகன் | ஜனவரி 15, 2025 | மாலை 6 |
வாழை | TBA | TBA |
சன் டிவி
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தற்போது வரை தனக்கான தனித்துவமான இடத்தை தக்க வைத்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள்.
திரைப்படம் | நாள் | நேரம் |
வேட்டையன் | ஜனவரி 14, 2025 | மாலை 6.30 |
ப்ளடி பெக்கர் | TBA | TBA |
ஜீ தமிழ்
சிறிய கால கட்டத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி இடத்தை பிடித்த ஜீ தமிழ் நிறுவனம், ஒவ்வொரு பண்டிகை காலமும் முக்கியமான தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களை தங்கள் வசம் கைப்பற்றியுள்ளது.
திரைப்படம் | நாள் | நேரம் |
The GOAT | ஜனவரி 14, 2025 | மாலை 6.30 |
Surya’s Saturday (எதிர்பார்க்கப்படுகிறது) | TBA | TBA |
கலைஞர் டிவி
புத்தம் புது தமிழ் திரைப்படங்கள், ஹிந்தி டப்பிங் சீரியல் என தற்போது பல முயற்சிகள் எடுத்து trp ரேட்டிங்கில் சற்று ஏற்றம் கண்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பொங்கல் தின சிறப்பு திரைப்படங்கள்.
திரைப்படம் | நாள் | நேரம் |
கருடன் | TBA | TBA |
தங்கலான் | TBA | TBA |
இந்தியன் 2 | TBA | TBA |