வாராவாரம் புத்தம் புதிய தலைப்பில் ‘Super Singer Junior 10’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு round-ம் நடைபெறும் சென்ற வாரம் ‘Superstar ஸ்பெஷல்’நடைபெற்றது. சிறப்பாக பாடிய தேனியை சேர்ந்த காயத்ரி சிறந்த performer ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர்ஸ்டார் கையெழுத்து போட்ட guitar அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பல போட்டியாளர்களுக்கு golden shower-ம் வழங்கப்பட்டது. இந்த எபிசோடில் நடிகை தன்ஷிகா, பாடகி கரேஷ்மா ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த (டிசம்பர்-14&15) வாரத்திற்கான தலைப்பு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SSJ 10-ல் Ragava Lawrence!!
இந்த வாரம் நடிகர் Ragava Lawrence சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ப்ரோமோவை வெளியிட்டனர் விஜய் டிவி. இதில் குருக்கலாம்பட்டியை சேர்ந்த விஷ்ணு என்ற போட்டியாளரின் கிராமத்திற்கு தண்ணீர் கிடைப்பதே அரிது என்றும் அதனால் தனது கிராமம் மிகுந்த இடர்பாடுகளை எதிர் கொள்வதாகவும் முந்தைய எபிசோடில் கூறியிருந்தார். இந்த குறையை நடிகர் Ragava Lawrence தனது தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம் தீர்த்துள்ளார்.
ப்ரோமோ வெளியான பிறகு, ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையிலும் நாயகனாக இருந்து வரும் நடிகர் Ragava Lawrence-ஐ இணையத்தில் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற பல தொண்டுகளை பல வருடங்களாக நடிகர் Ragava Lawrence செய்து வருகிறார் என்பதை அவரது ரசிகர்கள் மேற்கோள்காட்டி பல பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.