ஜீ தமிழில் ‘Raman Thediya Seethai’ என்ற மெகா தொடர் லான்ச் செய்யப்பட உள்ளது. டப்பிங் தொடர் என்பதால் சீரியல் ரசிகர்கள் விரும்பி காணுவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான திகழ்ந்து வருகிறது ஜீ தமிழ். பிற மொழிகளில் உள்ளதை போல தமிழிலும் மெகா தொடர்கள், ரியாலிட்டி ஷோ, பிரீமியர் திரைப்படங்கள் என்று பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். TRP ரேட்டிங்கில் சற்று பின்னடைவு இருந்தாலும் ஜீ தமிழ் சேனலில் தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல்கள் கணிசமான ரசிகர்களை சம்பாதித்துள்ளது. அதன் காரணமாக ஒரிஜினல் கதை மட்டும் அல்ல ஜீ நிறுவனத்தின் பிற மொழிகளில் ஒளிபரப்பாகி மக்களின் பாராட்டை பெற்ற தொடர்களை டப்பிங் செய்து ஜீ தமிழ் ரசிகர்களுக்கு படைக்கின்றனர். அந்த வரிசையில் ‘Raman Thediya Seethai’ இணைந்துள்ளது.
ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
Raman Thediya Seethai – இருவேறு துருவங்களின் சங்கமம்!
ஜீ கன்னடா தொலைக்காட்சியில் ‘ராமா சீதா’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு இந்த மெகா தொடரின் ஒளிபரப்பு ஆரம்பமானது. ரசிகர்கள் இந்த தொடருக்கு அளித்த ஆதரவு தமிழிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டப்பிங் செய்யப்பட்டு ‘Raman Thediya Seethai’ என்ற பெயரில் வரும் 17 மார்ச் 2025 முதல் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ராம் சாதுவான குணங்களை உடைய ஒரு பிசினஸ்மேன், மறுபுறம் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வரும் தாய் சீதா. அவர்களின் வாழ்க்கையை இணைக்கும் பாலமாக சீதாவின் குழந்தை மாறுகிறாள். இந்த மாற்றத்தால் இருவரும் சந்திக்கும் சவால்களே இந்த கதையின் மையக்கரு.
Raman Thediya Seethai – குழு, ஒளிபரப்பு நேரம், லான்ச் தேதி
இயக்குனர் | சப்னா கிருஷ்ணா |
நடிகர்கள் | வைஷ்ணவி கவுடா, ககன் சின்னப்பா, ரித்து சிங் |
லான்ச் தேதி | 17 மார்ச் 2025 |
நேரம் | மதியம் 2.30 மணி |
தற்போது மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மனசெல்லாம்’ தொடரின் மாற்றாக இந்த தொடர் வருகை தருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]