இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் வெளியாக உள்ளது ‘Roja 2’ சீரியல். இந்த மெகாத்தொடரின் முதல் பாகம் ‘Roja’ 2018 ஆம் ஆண்டு Saregama தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பானது.
Roja/ரோஜா
சன் டிவியில் ஐந்து வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த தொடரின் மொத்த எபிசொட் 1316 ஆகும். இதில் அர்ஜுன் மற்றும் ரோஜா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சிபு சூரியன் மற்றும் நடிகை பிரியங்கா நல்காரியின் சின்னத்திரை கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த இரு கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சவால்கள் சுவாரஸ்யமான கதைக்களத்துடன், காதல் என்ற விசேஷமான மூலப்பொருளை கலந்து படைக்கப்பட்டதால் பெரும்பாலான இளம் வயது ரசிகர்களை கவர்ந்தது.
இந்த தொடரின் இறுதி கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஜெசிகா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரோஜாவின் இரட்டை சகோதரி என அறிமுகம் செய்தாலும் பெரும்பாலான மக்களின் அதிருப்தியை பெற்றது. டிசம்பர் 2022 ஆம் ஆண்டு அன்று இந்த தொடர் முடிவடைந்தது.
Roja 2
முதல் பாக தொடரை தயாரித்த Saregama நிறுவனம் சில நாட்களுக்கு முன் ‘Roja 2’ சீரியலின் launching ப்ரோமோவை வெளியிட்டிருந்தது. அதில் ரோஜா மற்றும் அர்ஜுனின் மகள் மலர் இந்த பாகத்தின் நாயகியாக அறிமுகம் ஆக உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இவருக்கு ஜோடியாக சன் டிவி “மூன்று முடிச்சு” தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் நியாஸ் நடிக்கவிருக்கிறார்.
மேலும், “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், மெய்யழகன், விக்ரம் வேதா” போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகர் ராஜ்குமார், ‘எதிர்நீச்சல்’ ஹரிப்ரியா மற்றும் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வரும் நடிகை மீனா இதில் இணைந்துள்ளனர்.
ஆனால் முதல் பாகத்தில் ரோஜா மற்றும் அர்ஜுன் தம்பதிக்கு பிறந்த குழந்தையாக ஒரு மகனை காண்பித்த நிலையில், தற்போது மகள் என அறிமுகம் செய்தது பேசுபொருளாக அமைந்துள்ளது.
Saregama டிவி ஷோஸ் தமிழில் விரைவில் ‘Roja 2’ ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.