சின்னத்திரையில் தற்போது பிரபலம் அடைந்து கொண்டிருக்கும் செய்தியான நடிகர் Sanjeev-ன் திடீர் விலகல் பேசு பொருளாக மாறியுள்ளது. Sun TV-யில் மார்ச் 2024-ல் launch செய்யப்பட்ட “Lakshmi” மெகா சீரியல் மதிய நேரம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நடிகர் Sanjeev, தமிழ் திரைப்படங்கள், மற்றும் சின்னத்திரையில் “திருமதி செல்வம், மெட்டி ஒலி, யாரடி நீ மோகினி” போன்ற பிரபலமான தொடர்களில் கதாநாயகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளார். இந்த சீரியலில் கதாநாயகனாக Sun TV-க்கு மீண்டும் re-entry கொடுத்தார். இதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘செல்வம்’.
“Lakshmi” சீரியலின் கதாநாயகியாக, “office, தென்றல், தாலாட்டு மற்றும் அழகு” போன்ற மெகா தொடர்களின் heroine கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஷ்ருதி ராஜ் மஹாலக்ஷ்மி ஆக இதில் இணைந்தார்.
சீரியலில் இருந்து விலகிய Sanjeev!!!
Matinee நேரத்தில் கணிசமான பார்வையாளர்களை கவர்ந்து ஒளிபரப்பாகும் “Lakshmi” தொடரில் இருந்து விலகியுள்ளார். அதிகாரபூர்வமாக சஞ்சீவ் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இன்னும் கூறப்படாத நிலையில், இது குறித்து இணையத்தில் பலர் பலவிதமாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். கதையில் அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில் சீரியலில் இருந்து விலகியதாக காரணம் என்று அனுமானிக்கப்படுகிறது.
அதனால் அவருக்கு பதிலாக Sun TV-யில் இதற்கு முன் ஒளிபரப்பான “மகராசி” என்ற தொடரில் ஹீரோவாக நடித்த நடிகர் ஆர்யன் தற்போது “செல்வம்” என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, “யாரடி நீ மோகினி” என்ற மெகா ஹிட் சீரியலில் இருந்து திடீரென விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.