தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நாதஸ்வரம் நடிகை ஶ்ரீதிக்காவும், ஆர்யனும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அடுத்த ஜோடி திருமணத்துக்குத் தயாராகிவிட்டது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்திலும், ‘அமுதாவும் அன்னலட்சுமி’ சீரியலில் ஹீரோயினாகவும் நடித்து புகழ்பெற்ற கன்மணி மனோகரன், மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்துவரும் விஜே அஸ்வத்தை காதலித்து வந்தார். இருவர் வீட்டிலுமே காதலுக்கு கிரீன் சிக்னல் விழ, நேற்று கன்மணி விஜே அஸ்வத்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் விஜய் டிவி, ஜீ தமிழ் நடிகர்களைவிட, சன் டிவி நடிகர், நடிகைகள்தான் அதிக அளவில் கலந்துகொண்டர்.