2018 ல் விஜய் டிவியில் launch செய்யப்பட்ட “ஈரமான ரோஜாவே” என்ற மெகா தொடரில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் திரவியம் தற்போது அதே தொலைக்காட்சியில் புதிதாக வரவிருக்கும் “Sindhu Bairavi Kacheri Arambam” என்ற டூயல் ஹீரோ தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
Sindhu Bairavi Kacheri Arambam – புத்தம் புதிய தொடர்!
இன்று வெளியான “Sindhu Bairavi Kacheri Arambam” என்ற புத்தம் புதிய விஜய் டிவி தொடரின் launch ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடர் டூயல் ஹீரோ பின்னணியில் உருவாகியுள்ளது. முன்னணி நாயகனாக திரவியம் இவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ தொடரில் நடித்த ஆனந்த கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.
இந்த தொடரின் இரு நாயகிகளையும் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது, தெலுங்கு தொடர்களில் நாயகியாக நடித்த பவித்ரா நாயக் மற்றும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற dancer & சின்னத்திரை பிரபலம் ஆன ரவீணா நடித்துள்ளனர்.
துறுதுறுவென குதூகலமாக இருக்கும் அக்கா அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும் அமைதியான தங்கை. இருவரும் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்வது போல் காட்சி அமைந்துள்ளது. அங்கே அக்கா தனது ஒரு காதலன் ஆன நாயகன் திரவியத்தை காண்கிறாள். அதையடுத்து நிகழும் காட்சிகள் அந்தந்த கதாபாத்திரத்தின் பின்னணி மற்றும் குணங்களை மிகவும் அழகாக விவரிக்கிறது.
இந்த தொடர் விரைவில் விஜய் டிவியில் வெளியாகும் என்ற நிலையில், ஏற்கனவே இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி”க்கு பதிலாக இந்த சீரியல் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது என கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர்கள் – திரவியம், பவித்ரா நாயக், ரவீணா, ஆனந்த கிருஷ்ணன்
தொலைக்காட்சி – விஜய் டிவி
ஒளிபரப்பாகும் நாள் – விரைவில்