இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி விஜய் டிவியின் வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ ‘Start Music Season 5’ launch செய்யப்பட்டது. இதன் முதல் எபிசோடில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிம்ரன் பங்கேற்றனர்.
‘சவுண்ட் பார்ட்டி, ஒலியும் ஒளியும், Bioscope-Reloaded மற்றும் ஒழுங்கா பாடு இல்ல spray அடிச்சு புடுவேன்’ என நான்கு கட்டங்கள் கொண்ட இந்த ரியாலிட்டி ஷோ நகைச்சுவை, கொண்டாட்டம், சுவாரஸ்யம் நிறைந்ததாக எல்லா எபிசோடுகளும் அமைந்தது. ஒவ்வொரு ரவுண்டில் வெற்றி பெரும் அணியினர் ‘Lucky Room’ என்று அழைக்கப்படும் அறைக்கு சென்று அதில் அதிகபட்சமாக இருக்கும் ‘10,000/25,000/50,000,1,00,000’ காசு எடுப்பார்களா அல்லது அவர்களுக்கு கிடைக்க போவது முட்டையா என்ற பரபரப்பு கலந்த உணர்ச்சிகளும் இந்த ஷாவின் ஸ்பெஷல் என்றே கூறலாம்.
கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே இந்த சீசனும் சிறப்பாக தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், கலையரசன், MS பாஸ்கர், பரத் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் பங்கேற்றனர்.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு டிசம்பர் 22, 2024 அன்று வெளியாகும் 28வது எபிசோட் உடன் நிறைவடைகிறது. ப்ரோமோவில் ‘Grand Finale’ என்றே குறிப்பிடப்பட்டு வெளியானது. இதில் சிறப்பு விருந்தினராக சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த “Mr.&Mrs. சின்னத்திரை” நிகழ்ச்சியின் நடுவர்கள் நடிகை ராதா மற்றும் கோபிநாத் பங்கேற்றுள்ளனர்.
நடிகை ராதாவின் அணியில் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் மற்றும் சிவா இணைந்துள்ளனர். எதிர் அணியாக இருக்கும் கோபிநாத் உடன் நிஷா மற்றும் மீரா இணைந்துள்ளனர். கலகலப்பான பின்னணியில் உருவான இந்த ஷோ தற்போது நிறைவு பெறுகின்ற வேளையில் அதற்கு பதிலாக இனி வரும் வாரங்களில் இரவு 8 மணிக்கு புதிதாக என்ன ரியாலிட்டி ஷோ வரவுள்ளது என்றே கேள்வி தற்போது கிளம்பியுள்ளது.
ஞாயிறு அன்று மட்டும் ஒளிபரப்பாகும் இந்த நேரத்தில் ‘அண்டா கசம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை விஜய் டிவி எந்த ஒரு புது நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.