தினசரி மாலை பள்ளி முடிந்து, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடும் பொது தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பது வழக்கமாக இருந்தது. இதில் தொலைக்காட்சி தொடர்கள் வழியாக இன்றும் தமிழ் மக்களை தன வசம் வைத்துள்ள சேனல் சன் டிவி. சாட்டிலைட் டிவி தொடங்கி, அதன் வழியாக படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக ஒளிபரப்பி வரும் சன் டிவி, ரியாலிட்டி ஷோக்கள் தயாரித்து அதை ஹிட்டாக்க தவறியது பலருக்கும் தெரிந்த தகவல்.
இன்று விஜய் டிவி ஷோக்களுக்கு குவியும் ரசிகர்களுக்கு தெரியாத உண்மை, இந்த நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் பெரும்பாலும் சன் டிவியில் ஒளிபரப்பி, வெற்றியடையாத நிகழ்ச்சிகள் தான். அப்படியிருக்க சன் டிவியில் ஹிட்டாகாத ரியாலிட்டி மற்றும் கேம் ஷோக்கள் பல உண்டு.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இன்றும் நல்ல பார்வையாளர்கள் உண்டு, அனால் சமீபாக்காலத்தில் கூட, பெரியளவில் தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் அமையவில்லை. உலகளவில் பிரபலமான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி, பெரும்பான்மையான நாடுகளில் அந்தந்த நாட்டில் நடத்தப்படும் சமையல் நிகழ்ச்சியாகும்.

மாஸ்டர் செஃப் இந்தியா உடைய தமிழ் பரிமாணம் சன் டிவியில் ஒளிபரப்பானது. மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 1, 2021ல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகியது. நடிகர் விஜய் சேதுபதி முதல் சீசனை தொகுத்து வழங்கினார். அனால் அவர்கள் எதிர்பார்த்த அளவு பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி ஈர்க்காதது ஏமாற்றம் அளித்தது. அதிலும் உலகளவில் பிரபலமான சமையல் நிகழ்ச்சி அடுத்தடுத்த சீசன் எடுத்தாலும் அவ்வளவாக பேச படாதது சன் டிவியின் பலவீனமாக உள்ளது.

2012ல் ‘கையில் ஒரு கோடி, Are you ready?’ மற்றும் ‘Deal ஆ? No Deal ஆ?’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ரிஷி. சுவாரஸ்யமாக வாராவாரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிகளும் ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஹிந்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான Kaun Banega Crorepatiயை தமிழில் ‘கோடீஸ்வரன்’ என்ற பெயரில், நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்க தயாரித்தனர். ஏற்கனவே ஹிந்தியில் மட்டுமின்றி பல மாநிலங்களில் பிரபலமாக இருந்த KBC நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை உருவாக்கினாலும், அதன் மற்ற போட்டியாளரான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ மாதிரியான வெற்றியை சாதிக்க முடியவில்லை.

முன்னணி தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பலர், சன் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ‘நிஜங்கள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகை குஷ்பு. இந்த இரண்டு ஷோக்களும் ஒரு வருடத்திலேயே முடிந்தது. ‘தங்க வேட்டை’ நிகழ்ச்சிக்கு கிடைத்த ரசிகர்களும் ரம்யா கிருஷ்ணனின் நகைகள் மற்றும் புடவைக்காக திரண்ட ரசிகர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

நகைச்சுவை நிகழ்ச்சியான ‘காமெடி ஜங்ஷன்’ ஓரளவுக்கு ரசிகர்களை திரட்டினாலும், விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி சன் டிவி நிகழ்ச்சிக்கு கிடைக்கவில்லை. அதற்கு மாறாக ‘சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சி மாபெரும் வெற்றிகரமாக அமைந்தது.
விஜய் டிவியின் TRP ரேட்டிங்கை உயர்த்திய ஒரு நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’. இந்த சமையல் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கத்தவர்களே இல்லை என்பது போல கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன் நிறுவனம் இந்த ஆண்டு விஜய் டிவியை விட்டு சன் டிவியில் இணைந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்த ரசிகர்கள் கடந்த சீசன் வரை ஒத்துழைப்பு தந்தாலும், சீசன் 5ல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த என்டேர்டைன்மெண்ட் கிடைக்காமல் Sun TVயில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக் டூப் குக்’ ஷோவை கொண்டாட தொடங்கியுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அதே கான்செப்டை டாப் குக் டூப் குக் ஷோவாக மாற்றி Sun TVயில் வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். விஜய் டிவியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், கோமாளிகள் பரத், மோனிஷா என பலர் Sun TVக்கு வந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
‘கலக்க போவது யார்’ நிகழ்ச்சிக்கு முன்னோடி ‘அசத்த போவது யார்‘ , ‘காபி வித் DD’ ஷோவுக்கு முன்னோடி ‘காபி வித் சுசி’ என Sun TVயில் இருந்த ஷோக்களை விஜய் டிவியில் எடுத்த காலம் மாறி, தற்போது விஜய் டிவியில் இருந்து கன்டென்ட் எடுக்கும் நிலைமையில் இருந்தாலும் அதை ஹிட் ஷோவாக மாற்றுவது சேனல் தான்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]