Home Television ‘வாரணம் ஆயிரம்’, ‘மருமகள்’…படையெடுக்கும் Sun TV’யின் புதிய சீரியல்கள்!

‘வாரணம் ஆயிரம்’, ‘மருமகள்’…படையெடுக்கும் Sun TV’யின் புதிய சீரியல்கள்!

தமிழ் சின்னத்திரையின் நம்பர் 1 சேனலான Sun Tv அடுத்தடுத்து புதிய மெகா தொடர்களை களமிறக்கிக்கொண்டே இருக்கிறது.

by Santhiya Lakshmi

தமிழ் சின்னத்திரையின் நம்பர் 1 சேனலான Sun Tv அடுத்தடுத்து புதிய மெகா தொடர்களை களமிறக்கிக்கொண்டே இருக்கிறது. இதில் நடிக்க விஜய் டிவியின் இரண்டு பிரபல ஹீரோயின்களை தன் சேனலுக்கு கொண்டுவந்திருக்கிறது Sun TV.

கடந்த மாதம் ‘மல்லி’, ‘புன்னகைப்பூவே’, ‘பூவா தலையா’, ராமாயணம், ‘அனாமிகா’ என மொத்தம் ஐந்து சீரியல்களை ஒளிப்பரப்பத் தொடங்கிய சன் டிவி, அடுத்து ஜூன் ரிலீஸாக இரண்டு சீரியல்களை ஒளிபரப்ப இருக்கிறது. இதில் முதல் சீரியலின் ப்ரோமோவை இன்று வெளியிட்டிருக்கிறது.  ‘மருமகள்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்த சீரியலில் விஜய் டிவியின் பிரபல ஹீரோயினான கேப்ரியல்லா நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடித்தவர். இவருக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்த ராகுல் ரவி நடிக்கிறார். 

அடுத்து ‘வாரணம் ஆயிரம்’ என்கிற சீரியலை அறிமுகப்படுத்த இருக்கிறது Sun TV. இதில் ஜீ தமிழ் சீரியல்களான ‘புதுப் புது அர்த்தங்கள்’, ‘சண்டக்கோழி’ சீரியல்களில் நடித்த நியாஸ்கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் இன்னொரு ஹீரோயினாக நடித்த ஸ்வாதி கொண்டே நடிக்கிறார். ‘வாரணம் ஆயிரம்’ சீரியல் கெளதம் மேனனின் படத்தைப்போலவே காதல் தோல்வியால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஹீரோவை திருமணம் செய்துகொள்ளும் பெண் எப்படி அதில் இருந்து மீட்கிறாள் என்பதே கதை.

சன் டிவியுடன் போட்டிபோட விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களும் புதிய சீரியல்களை விரைவில் களமிறக்க இருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.