Home Television ‘குக்கு வித் கோமாளி’யை வீழ்த்திய சன் டிவியின் ‘TOP COOKU DUPE COOKU’!

‘குக்கு வித் கோமாளி’யை வீழ்த்திய சன் டிவியின் ‘TOP COOKU DUPE COOKU’!

குக்கு வித் கோமாளியை மிஞ்சும் சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி...

by Sudhakaran Eswaran

குக்கு வித் கோமாளியை மிஞ்சும் சன் டிவியின் TOP COOKU DUPE COOKU நிகழ்ச்சி…

விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ தயாரிப்பில் இருந்து விலகி மீடியா மேசன்ஸ் நிறுவனம் சன் டிவியில் ‘TOP COOKU DUPE COOKU’ நிகழ்ச்சியைத் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்தே பரபரப்பு பற்றிக்கொண்டது. விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’யை ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ டிஆர்பியில் வீழ்த்துமா அல்லது வீழுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாப்பு குக்கு டூப்பு குக்கின் முதல் வார ரேட்டிங் இன்று வெளியாகியிருக்கிறது. 

குக்கு வித் கோமாளி இந்த வாரம் 3.91 TRP புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதாவது சனிக்கிழமை 3.97 TRP  புள்ளிகளும், ஞாயிற்றுக்கிழமை 3.84 TRP புள்ளிகளும் பெற்றிருக்கிறது. மொத்த ஆவரேஜாக 3.91. இது கடந்த வாரத்தைக்காட்டிலும் குறைவு. கடந்தவாரம் ‘குக்கு வித் கோமாளி’ 3.99 TRP  புள்ளிகள் பெற்றிருந்தது.

இதற்கிடையே இந்த வாரம் வெளியானது சன் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’ காப்பியான ‘டூப்பு குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சியின் முதல் வார டிஆர்பி. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஒளிபரப்பாகும் ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சி 4.26 TRP  புள்ளிகள் பெற்று குக்கு வித் கோமாளியை வீழ்த்தியிருக்கிறது. 

Untitled design 16 5

அடுத்தவாரம் வடிவேலு இடம்பெற்றிருந்த எபிசோடுக்கான ரேட்டிங் வரும் என்பதால் டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குக்கு வித் கோமாளியா அல்லது TOP COOKU DUPE COOKU-கா…அடுத்தவாரம் பார்க்கலாம்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.