விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமாளி’க்கு போட்டியாக டாப்பு குக்கு டூப்பு குக்கு எனும் நிகழ்ச்சியை நாளை முதல் சன் டிவி ஒளிபரப்ப இருக்கிறது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியைத்தயாரித்த அதே மீடியா மேசன்ஸ் நிறுவனம்தான் சன் டிவியின் இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது. அதனால் கான்செப்ட்டை மட்டுமல்ல டூப்புகளையும் விஜய் டிவியில் இருந்தே சன் டிவிக்கு ஷிஃப்ட் செய்திருக்கிறது மீடியா மேசன்ஸ்.
வெங்கடேஷ் பட் நடுவாராக இருக்கும் இந்த ஷோவில் Top Cooku Dupe Cooku யார் யார் எனப்பார்ப்போம்!
சைத்ரா ரெட்டி
‘கயல்’, யாரடி நீ மோகனி டிவி சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த சைத்ரா ரெட்டி டாப்பு குக்கு டூப்பு நிகழ்ச்சியின் டாப் குக்காக களமிறங்குகிறார். சன் டிவி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம் என்பதால் சைத்ரா முக்கியமான டிஆர்பி ஸ்டாராக இருப்பா என எதிர்பார்க்கிறது சன் டிவி.
நரேந்திர பிரசாத்
‘கல்லூரி சாலை’ உள்ளிட்ட சில படங்கள், யூ-ட்யூப் சீரிஸ்களில் நடித்தவரான நரேந்திர பிரசாத் டாப்பு குக்காக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
சோனியா அகர்வால்
நடிகை சோனியா அகர்வால் இந்த நிகழ்ச்சியின் மூலம் சமையல் கலைஞராக மாறுகிறார். டாப்பு குக்காக இதில் பங்கேற்கிறார் சோனியா
சாய் தீனா
‘தெறி’ படத்தில் ஆவியா, ஜூவியா எனக்கேட்டு தெறிக்கவிடும் ஸ்டண்ட் கலைஞரான சாய் தீனா டாப்பு குக்காக கலந்துகொள்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தா சன் டிவிக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ஜம்ப் அடித்திருக்கிறார்.
ஃபெப்சி விஜயன்
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன்களில் ஒருவரும், ஃபெப்சி அமைப்பின் தலைவராகவும் இருந்த ஃபெப்சி விஜயன் டாப்பு குக்காக நிகழ்சியில் பங்கேற்கிறார்.
ஷாலி நிவேகாஸ்
வல்லமை தாராயோ யு-டியூப் சீரிஸ் மூலம் மீடியாவுக்குள் நுழைந்து விஜேவாகவும், நடிகையாகவும் புகழ்பெற்றுவரும் ஷாலி நிவேகாஸ் டாப்பு குக்காக கலந்துகொள்கிறார்
சுஜாதா
விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்று பின்னர் ‘பருத்தி வீரன்’ சுஜாதாவாக அடையாளம் பெற்ற சுஜாதா டாப்பு குக்காக கலந்துகொள்கிறார்.
சிங்கம்புலி
அஜித் நடித்த ‘ரெட்’ படத்தின் இயக்குநரும், தற்போதைய காமெடி நடிகருமான சிங்கம் புலி டாப்பு குக்காக பங்கேற்கிறார்.
இந்த குக்குகளைத் தவிர, டூப்புகளாக விஜய் டிவியின் பெரிய பட்டாளமே அப்படியே சன் டிவிக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறது. ஜிபி முத்து, தீபா, அதிர்ச்சி அருண், விஜய், கதிர், தீனா, பரத் – முகுந்த், மோனிஷா பிளெஸ்ஸி, செளந்தர்யா என மொத்தம் 11 பேர் டூப்பு குக்குகளாக கலத்தில் இறங்கியிருக்கின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]