நவம்பர் 16, 2024 அன்று “Super Singer Junior 10” முதல் பிரம்மாண்டமாக எபிசொட் ஒளிபரப்பானது. டிசம்பர் 1 வரை ஒளிபரப்பான எபிசோட் அனைத்து போட்டியாளர்களை நடுவர்கள் மற்றும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் விதமாக “என் குரல் என் கதை” என்ற theme-ல் வெளியானது. புதிதாக டிசம்பர் 1 ஆம் தேதி எபிசோடில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிரியங்கா என்ற புது போட்டியாளர் இந்த பயணத்தில் இணைந்து கொண்டார். மேலும் முதல் எபிசோடில் “Best Performer” பரிசை சென்னையை சேர்ந்த சாரா ஸ்ருதிக்கு வழங்கப்பட்டது.
புதிதாக ஒளிபரப்பான Super Singer Junior 10 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TVR (Television Viewer Rating) தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீடு 4.8 ஆக பதிவாகியுள்ளது. பார்வையாளர்களின் மேலும் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த வாரம் “Superstar ஸ்பெஷல்” என்ற ப்ரோமோவை சுவாரஸ்யமான விதத்தில் வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
Superstar ஸ்பெஷல்
மழலை குரலில் “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, ரா ரா ராமையா, என்னம்மா கண்ணு, ஸ்டைலு ஸ்டைலு தான்” போன்ற பாடல்கள் இந்த வாரம் ஒலிக்க உள்ளது. முதல் ப்ரோமோவில் Superstar கையெழுத்து போட்ட guitar இந்த வாரம் சிறப்பாக பாடுபவருக்கு கிடைக்கும் என்று தொகுப்பாளினி பிரியங்கா கூறுவது போல் அமைந்தது.

Image Source – vijay television (Instagram)
அதன் பிறகு வெளியான இரண்டு ப்ரோமோவில் நடிகர் ரஜினி போல் வேடமிட்டு பாடும் குழந்தைகள். அதன் பிறகு குருக்கலாம்பட்டியில் இருந்து பங்கு பெரும் விஷ்ணு என்ற போட்டியாளருக்கு keyboard வாத்தியத்தை வாங்கி தருவதாக கூறிய இசையமைப்பாளர் இமான் இந்த வார எபிசோடில் Yamaha i500 வகை keyboard வாங்கி கொடுத்து விஷ்ணுவின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் தருணங்கள் இடம்பெற்றன. இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகை தன்ஷிகா பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் superstar உடன் ‘கபாலி’ என்ற திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிரும் வண்ணம் Superstar Hits எபிசொட் அமையும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இந்த முறை பலவிதமான பின்னணியில் இருந்து வந்துள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது மக்களிடம் நல்ல அனுமானத்தை Super Singer Junior 10 பெற்றுள்ளது. அதை சமூக வலைத்தளங்களின் comment box, பதிவுகளில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]