Home Television ஜூலை இரண்டாம் வார டிஆர்பி ரிப்போர்ட்!

ஜூலை இரண்டாம் வார டிஆர்பி ரிப்போர்ட்!

இந்த வார டிஆர்பி ரிப்போர்ட் படி எகிறியடிக்கிறது விஜய் டிவி. சன் டிவியின் புதிய தொடர்கள்

by Vinodhini Kumar

இந்த வார டிஆர்பி ரிப்போர்ட் படி எகிறியடிக்கிறது விஜய் டிவி. சன் டிவியின் புதிய தொடர்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் டிஆர்பி- யில் தத்தளிக்க ஆரம்பித்திருக்கிறது சன் டிவி.

TRP positionSerial TRP rating
1சிறகடிக்க ஆசை 9.86 TRP
2பாக்கியலட்சுமி 8.54 TRP
3பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.93 TRP
4சிங்கப்பெண்ணே 7.49 TRP
5கயல் 7.12 TRP
6மருமகள் 6.93 TRP
7சின்ன மருமகள் 6.81 TRP
8ஆஹா கல்யாணம் 6.57 TRP
9வானத்தைப்போல 6.51 TRP
10சுந்தரி 6.07 TRP

1. சிறகடிக்க ஆசை – 9.86 TRP

தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது சிறகடிக்க ஆசை. கடந்த வாரம் 9.52 என்கிற ரேட்டிங்கில் இருந்து இந்தவாரம் 9.86 முன்னேறியிருக்கிறது.

2. பாக்கியலட்சுமி – 8.54 TRP

ராதிகாவா, பாக்கியாவா, கோபி திருந்துவான என்கிற முக்கோணக் கதை இந்தவாரமும் ரேட்டிங்கில் தூள் கிளப்பியிருக்கிறது. கடந்தவாரம் 8.12 என்கிற ரேட்டிங்கில் இருந்து இந்த வாரம் 8.54 ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது.  

3. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 7.93 TRP

Pandian 2 serial poster

பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீசன் 2 பிக் அப் ஆக ஆரம்பித்துவிட்டது. கடந்த சில வாரங்களாக ஐந்தாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாம் இடத்துக்கு வந்துவிட்டது.

4. சிங்கப்பெண்ணே – 7.49 TRP

‘சிங்கப்பெண்ணே’வுக்கு நேரம் சரியில்லை. 9 மணிக்கு வந்ததில் இருந்தே சோதனைதான். கடந்தவாரம் 8.26-ல் இருந்து தடாலென இறங்கி 7.49-க்கு வந்துவிட்டது.

5. கயல் – 7.12 TRP

கயல் கடந்தவாரம் 8.03 என இருந்தது இந்தவாரம் 7.12 எனக் குறைந்திருக்கிறது. இருந்தாலும் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

6. மருமகள் – 6.93 TRP

கேப்ரியெல்லா நடிக்கும் ‘மருமகள்’ சீரியல் கடந்தவாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் கொஞ்சமே கொஞ்சம் முன்னேறியிருக்கிறது. 6.89-ல் இருந்து 6.93.

7. சின்ன மருமகள் – 6.81 TRP

Chinna Marumagal serial

விஜய் டிவியின் சின்ன மருமகள் 6.81 என்கிற ரேட்டிங்கோடு ஏழாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. 

8. ஆஹா கல்யாணம் – 6.57 TRP

6.57 என்கிற ரேட்டிங்கைப் பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது ஆஹா கல்யாணம்.

9. வானத்தைப்போல – 6.51 TRP

சீக்கிரம் க்ளைமேக்ஸைக் காண இருக்கும் ‘வானத்தைப்போல’ இந்த வாரம் 6.51 டிஆர்பி பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.

10. சுந்தரி – 6.07 TRP

சன் டிவியின் சுந்தரி தொடர்ந்து பத்தாவது இடத்தில் இருக்கிறது! 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.