பிரபல டிவி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் தினமும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் TRP ரேட்டிங்கில் மாஸ் காட்டிய டாப் 5 சீரியல்களின் லிஸ்ட் இதோ…
சிங்கப் பெண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘சிங்கப் பெண்ணே’. இந்த சீரியல் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை 150 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை தனுஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த வாரம் TRP-யில் இதுதான் 10.15 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியல் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தற்போது வரை 765 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், அபி நவ்யா, உமா ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை பி.செல்வம் இயக்கி வருகிறார். இந்த வாரம் TRP-யில் இதுதான் 9.68 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தற்போது வரை 685 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, வேல ராமமூர்த்தி, சபரி பிரஷாந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை வி.திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த வாரம் TRP-யில் இதுதான் 8.74 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘வானத்தைப்போல’. இந்த சீரியல் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தற்போது வரை 1015 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், சாந்தினி பிரகாஷ், அஸ்வந்த் கார்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை R.K இயக்கி வருகிறார். இந்த வாரம் TRP-யில் இதுதான் 8.09 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியல் கடந்த ஆண்டு (2023) ஜனவரி 23-ஆம் தேதி முதல் தற்போது வரை 345 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்யலக்ஷ்மி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை எஸ்.குமரன் இயக்கி வருகிறார். இந்த வாரம் TRP-யில் இதுதான் 7.9 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com