Home Serial 2024 ஏப்ரல் 2-வது வாரமும் TRP ரேட்டிங்கில் கெத்து காட்டிய SUN TV சீரியலான ‘சிங்கப் பெண்ணே’!

2024 ஏப்ரல் 2-வது வாரமும் TRP ரேட்டிங்கில் கெத்து காட்டிய SUN TV சீரியலான ‘சிங்கப் பெண்ணே’!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப் பெண்ணே' சீரியல் தான் கடந்த சில வாரங்களாகவே TRP-யில் நம்பர் 1-ஆக மாஸ் காட்டி வருகிறது.

by Sivaanantham RB

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘சிங்கப் பெண்ணே‘. இந்த சீரியல் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் தற்போது வரை 160 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் லீட் ரோல்களில்  மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா, அமல் ஜித் நடிக்கின்றனர். மேலும், VJ பவித்ரா, ஞானசம்பந்தம், ரமா, அஞ்சு, யோகலக்ஷ்மி, ஜீவிதா, ஹன்சிதா விஜயன், நிவேதா ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தனுஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இந்த சீரியலுக்கு பிரபாஸ் முத்தையா திரைக்கதை எழுதுகிறார், பொன் இளங்கோ – ஆனந்த் வேணு இணைந்து வசனம் எழுதுகின்றனர். கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் தான் TRP-யில் நம்பர் 1-ஆக மாஸ் காட்டி வருகிறது. தற்போது, இந்த வாரம் TRP-யிலும் இதுதான் 9.46 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.