Home Serial TRP ரேட்டிங்கில் நம்பர் 1-ஆக இருக்கும் VIJAY TV & ZEE TAMIL சீரியல்கள்!

TRP ரேட்டிங்கில் நம்பர் 1-ஆக இருக்கும் VIJAY TV & ZEE TAMIL சீரியல்கள்!

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் இந்த வாரம் TRP ரேட்டிங்கில் நம்பர் 1-ஆக இருக்கும் சீரியல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB


பிரபல டிவி சேனல்களான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் தினமும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் TRP ரேட்டிங்கில் நம்பர் 1-ஆக இருக்கும் சீரியல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

Untitled design 105

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை‘. இந்த சீரியல் கடந்த ஆண்டு (2023) ஜனவரி 23-ஆம் தேதி முதல் தற்போது வரை 355  எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் லீட் ரோல்களில் வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா நடிக்கின்றனர். மேலும், ஆர்.சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்யலக்ஷ்மி, தமிழ் செல்வி, ஸ்ரீ தேவா, ப்ரீத்தா ரெட்டி, ரேவதி, திவாகர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை எஸ்.குமரன் இயக்கி வருகிறார். இந்த வாரம் விஜய் டிவி சீரியல்களின் TRP-யில் இதுதான் 8.19 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

விஜய் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்த ‘The GOAT’ படத்தின் ‘WHISTLE PODU’ பாடல்!

karthigai 2 16971839003x2 1

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘கார்த்திகை தீபம்‘. இந்த சீரியல் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முதல் தற்போது வரை 446  எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் லீட் ரோல்களில் கார்த்திக் ராஜ், ஆர்த்திகா நடிக்கின்றனர். மேலும், ராஜேஷ், மீரா கிருஷ்ணா, விசித்ரா, மோகன் ராமன், ரியா சௌத்ரி, தினேஷ் கோபால்சாமி, தமிழ் செல்வி, மது மோகன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனை கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த வாரம் ஜீ தமிழ் சீரியல்களின் TRP-யில் இதுதான் 5.26 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.