Home Serial டிஆர்பி அப்டேட்… இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?

டிஆர்பி அப்டேட்… இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?

சின்னத்திரையும், டிஆர்பியும் பிரிக்கமுடியாதவை. சின்னத்திரை உலகமே டிஆர்பி-யைவ மையமாக வைத்துத்தான் இயங்குகிறது.

by Naveen Dhayalan

டாப் 10 சீரியல்கள்

1. சிறகடிக்க ஆசை – 9.08 TVR – விஜய் டிவி
2. கயல் – 7.93 TVR – சன் டிவி
3. சிங்கப்பெண்ணே – 7.85 TVR – சன் டிவி
4. எதிர் நீச்சல் – 7.81 TVR – சன் டிவி
5. பாக்கியலட்சுமி – 7.51 TVR – விஜய் டிவி
6. பாண்டியன் ஸ்டோர்ஸ் – 7.21 TVR – விஜய் டிவி
7.  இனியா – 6.84 TVR- சன் டிவி 
8. வானத்தைப்போல – 6.44 TVR – சன் டிவி
9.  ஆனந்த ராகம் – 6.24 -சன் டிவி
10. ஆஹா கல்யாணம் – 6.21 TVR – விஜய் டிவி

சின்னத்திரையும், டிஆர்பியும் பிரிக்கமுடியாதவை. சின்னத்திரை உலகமே டிஆர்பி-யைவ மையமாக வைத்துத்தான் இயங்குகிறது. அரை மணி நேரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியை எத்தனைப் பேர் பார்த்தார்கள் என்கிற கணக்குதான் TRP. அதாவது டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட். ஒரு நாளில் மொத்தம் 48 அரை மணி நேரங்கள். வாரத்துக்கு 336 அரைமணி நேரங்கள். இந்த 336 அரை மணி நேரத்தின் TRP-யையும் கூட்டினால் என்ன வருகிறதோ அதுதான் அந்த வாரத்தின், அந்த சேனலின் GRP. அதாவது கிராஸ் ரேட்டிங் பாயின்ட்.

ஒரு நிகழ்ச்சிக்கு 1 டிஆர்பி வருகிறது என்றால் தோராயமாக 10 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு சீரியலுக்கு 10 டிஆர்பி என்றால் 1 கோடி பார்க்கிறார்கள் என்று பொருள். இந்த டிஆர்பி கணக்கை வைத்துதான் விளம்பரதாரர்கள் அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். அதேப்போல டிவி நிறுவனங்களின் ஒரு நிகழ்ச்சியின் டிஆர்பியை வைத்துத்தான் விளம்பர கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. அதனால் ஒரு சேனலின் வருமானத்துக்கு டிஆர்பி மிகவும் முக்கியம் என்பதால் எல்லா சேனல்களும் முட்டாள்தனமாக இருந்தாலுமே டிஆர்பி-க்காக சில நிகழ்ச்சிகளை, சில சீரியல் காட்சிகளை ஒளிபரப்புகின்றன.

டிஆர்பி, ஜிஆர்பி கணக்குகளை ஒவ்வொருவாரமும் மும்பையில் இயங்கும் BARC என்கிற அமைப்பு ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியிடும். இதில் அர்பன் 15+ என வகைப்படுத்தப்படும் டிஆர்பியைத்தான் சேனல்கள் முக்கியமாகக் கருதும். காரணம் இந்த ரேட்டிங் தான் விளம்பர கட்டணத்தை நிர்ணயிக்க ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதன்படி 2024-ம் ஆண்டுக்கான 16-வது வாரத்துக்கான டிஆர்பி இன்று காலை மணிக்கு வெளியானது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை 9.08டிஆர்பியுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ 7.93 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. சன் டிவியின் ‘சிங்கப்பெண்ணே’ 7.85 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

இந்த வாரத்தின் டாப் 10 சீரியல்களில் 6 இடங்களை சன் டிவி தொடர்களும், நான்கு இடங்களை விஜய் டிவி தொடர்களும் பிடித்திருக்கின்றன. முதல் 10 இடங்களுக்குள் ஜீ தமிழின் சீரியல்கள் எதுவும் இல்லை. ‘செம்பருத்தி’ ஹீரோ கார்த்தி நடிக்கும் ‘கார்த்திகை தீபம்’ தொடர் ஜீ தமிழின் டாப் ஷோவாக 4.96 என்கிற டிஆர்பியைப் பெற்றிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.