Home Serial வீழ்த்தப்பட்ட சிறகடிக்க ஆசை… முதலிடம் பிடித்தது யார்? இந்த வாரம் TRP Rating

வீழ்த்தப்பட்ட சிறகடிக்க ஆசை… முதலிடம் பிடித்தது யார்? இந்த வாரம் TRP Rating

by charles.atr

டிவி சேனல்களுக்கான டிஆர்பி ரிப்போர்ட் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகாமல் இன்று வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்துவந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரை வீழ்த்தி இந்த வாரம் சன் டிவியின் இரண்டு சீரியல்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை இந்த வாரம் 7.75 ரேட்டிங்கோடு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட சன் டிவியின் சிங்கப்பெண்ணே 8.38 ரேட்டிங்கோடு முதலிடத்தையும், கயல் 7.83 ரேட்டிங்கோடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

TRP வரிசைசீரியல்TRP ரேட்டிங்
1சிங்கப்பெண்ணே8.38 TRP
2கயல்7.83 TRP
3சிறகடிக்க ஆசை7.75 TRP
4மல்லி7.03 TRP
5மருமகள்6.84 TRP
6வானத்தைப்போல6.82 TRP
7சுந்தரி6.73 TRP
8பாக்கியலட்சுமி 6.26 TRP
9பாண்டியன் ஸ்டோர்ஸ்5.93 TRP
10இராமாயணம்5.15 TRP

நான்காவது இடத்தை மீண்டும் சன் டியின் ‘மல்லி’ சீரியல் 7.03 ரேட்டிங்கோடு விஜய் டிவி சீரியல்களை ஓரங்கட்டியிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

Siragadikka Aasai edited

சன் டிவியின் மருமகள் 6.84 ரேட்டிங்கோடு ஐந்தாவது இடத்தையும், இந்த வாரத்தோடு முடிவடையும் வானத்தைப்போல 6.82 ரேட்டிங்கோடு ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சுந்தரி 6.73 ரேட்டிங்கோடு ஏழாவது இடத்தைப் பிடிக்க, பாக்கியலட்சுமி இந்த வாரம் 6.26 ரேட்டிங்கோடு எட்டாவது இடத்துக்குப் பின் தங்கியிருக்கிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2 சீரியல் 5.93 ரேட்டிங்கோடு ஒன்பதாவது இடத்தையும், சன் டிவியில் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இராமாயணம் 5.15 ரேட்டிங்கோடு முதல் முறையாக டாப் 10 சீரியல்களுக்குள் இடம்பிடித்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.