Home Serial வார வாரம் திருப்பங்கள், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் தமிழ் serial-கள் promo.

வார வாரம் திருப்பங்கள், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் தமிழ் serial-கள் promo.

இந்த வாரம் எந்தெந்த Serial -கள் டாப் 10 லிஸ்டில் இருக்கின்றன. டிவி சேனல்கள் வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரோமோ வீடியோக்கள். 

by Sudhakaran Eswaran

இந்த வாரம் எந்தெந்த Serial -கள் டாப் 10 லிஸ்டில் இருக்கின்றன. டிவி சேனல்கள் வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரோமோ வீடியோக்கள். 

பிரபல டிவி சேனல்களான சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகியவற்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் Serial -கள் TRP ரேட்டிங் அடிப்படையில் மக்களை சென்றடைகிறது. கடந்த வாரத்தின் தொடர்ச்சியை அந்த வார ப்ரோமோவில் வெளியிட்டு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.

இந்த மாதத்தில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது சீரியல்கள் ஒளிபரப்பாக தயார் நிலையில் உள்ளன.

அந்த வகையில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ள சீரியல்கள். 

Kollywoodglam 2 9

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த Serial இந்த வாரத்தில் 9.13 TRP கொண்டு முதலிடத்தில் உள்ளது.மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். சொந்த ஊருக்கு சென்றதிலிருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆனந்தி. சுயம்புலிங்கம் தரும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளித்து தனது குடும்பதை காப்பாற்றுவாரா ஆனந்தி. பரபரப்பான ப்ரோமோ வீடியோ.   

சிறகடிக்க ஆசை:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த Serial 8.76 TRP புள்ளிகள் கொண்டு 2 -வது இடத்தில் உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்ற மீனா, அங்கு ரோகிணி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மீனா அதிர்சியடைகிறாள். இந்த விஷயம் குடும்பத்திற்கு தெரிய வர பூதாகரமாக பெரிய பிரச்சனை ஆகிறது. வரும் வாரத்தில் பரபரப்பான ப்ரோமோ வெளியிட்டுள்ளது.  

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் Serial இந்த வாரத்தில் 8.68 TRP  புள்ளிகள் கொண்டு  3 -வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயல், எழிலின் திருமண வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் கயல் குடும்பத்தோடு திருமண வேலைகள் மகிழ்ச்சியாக நடைபெற்று வருமாறு ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் Serial வானத்தை போல. இந்த வாரம் 8.23 TRP புள்ளியில் 4-வது இடத்தில் உள்ளது. 4 வருடங்களாக ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியல் இந்த வாரம் முடிவுக்கு வந்தது. சின்ராசு மற்றும் துளசியின் அண்ணன், தங்கை பாசப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 8.03 TRP ரேட்டிங் கொண்டு 5-வது இடத்தில் உள்ளது. பிரபு மற்றும் ஆதிரைக்கு திருமண நிச்சய ஏற்பாடு நடைபெறும் சமயம் வேல்விழி பிரச்சனை செய்ய வரும்போது அதனை பொறுக்காமல் ஆதிரை வேல்விழியை அறைந்து விடுவார். அதனை கண்டா பிரபு ஆதிரைய ரொம்ப பிடித்துபோகிறது. அடுத்து நடப்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி Serial இந்த வாரம் 7.45 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. விஜய்யை திருமணம் செய்த மல்லி. விஜய், மல்லிக்கு தாலி கட்டும் சமயம் மல்லிக்கு தலை சுற்றுவது போல இருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடும் மல்லி, காப்பாற்ற துடிக்கும் விஜய் என பரபரப்பாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.28 TRP புள்ளியில் 7-வது இடத்தில் உள்ளது. வெற்றிக்கும், சுந்தரிக்கும் திருமணம் நடைபெறுவது உறுதியான நிலையில் அடுத்து நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த Serial 6.94 TRP புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். ராமமூர்த்தியின் சதாபிஷேகத்திற்கு வரும் கோபி, கோபி வந்ததை பிடிக்காத ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி கோபியை அவமான படுத்தி வெளியே போக செல்லுமாறு ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.33 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். ராஜீ டியுசன் சொல்லி தரும் இடத்தில் பிரச்சனை ஏற்பட, பாண்டியன் சொன்னதை மீறி வேலைக்கு சென்ற ராஜீ மூல அவமான படும் பாண்டியன் குடும்பம். அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலை ஏற்படுத்தும் ப்ரோமோ வீடியோ. 

சின்ன மருமகள்:

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. நவீன் குமார், சுவேதா முக்கியமாக கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 6.33 TRP ரேட்டிங் கொண்டு 10-வது இடத்தில் உள்ளது. தமிழ், கணவரின் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பிறகு தமிழின் அப்பா தமிழுக்கு ஆரத்தி எடுத்து உங்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வீர்கள் என்று கௌரியிடம் சபதம் விட அதே மாறி செய்து கட்டிய தமிழின் அப்பா செல்லப்பாண்டி.    

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.