Home Serial வெளியானது இந்த வார தமிழ் சீரியல் TRP தரவரிசை!

வெளியானது இந்த வார தமிழ் சீரியல் TRP தரவரிசை!

தமிழ் சீரியல்களை ஒவ்வொரு வாரமும் மதிப்பிட்டு, அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வெளியாகும் TRP ரேட்டிங், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்கு வெளியாகியது.

by Vinodhini Kumar

கடந்த சில வாரங்களாக டாப் 10-ல் விஜய் டிவி, சன் டிவி தலா ஐந்து இடங்களைப் பிடித்துவந்த நிலையில், இந்தவாரம் சன் டிவியின் 6 சீரியல்கள் டாப் 10 இடத்தைப் பிடித்திருக்கின்றன. 

Siragadikka Aasai serial

சின்னத்திரைக்கான இந்த வார டிஆர்பி இன்று வெளியாகியிருக்கிறது. 2024-ம் ஆண்டின் 31-வது வார இந்த ரேட்டிங்படி தொடர்ந்து விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 10.11 ரேட்டிங்கோடு TRP தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இது கடந்த வாரத்தைக்காட்டிலும் குறைவு என்றாலும் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமியும் இந்த வாரம் சற்றே குறைந்து 8.46 டிஆர்பியோடு இருக்கிறது. முன்பை போல பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், TRP தரவரிசையில் தன்னுடைய இரண்டாவது இடத்தை விடாமல் இருக்கிறது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல்.

கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரம் பின்தங்க, சன் டிவியின் சிங்கப்பெண்ணே, கயல் தொடர்கள் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. சிங்கப்பெண்ணே 7.99டிஆர்பியோடு மூன்றாவது இடத்தில் இருக்க, கயல் 7.79 டிஆர்பியோடு நான்காவது இடத்தில் இருக்கிறது.

Pandian Stores 2 TRP தரவரிசை

பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.62டிஆர்பியோடு மீண்டும் TRP தரவரிசையில் தனது பழைய இடமான ஐந்தாவது இடத்துக்குப்போய்விட்டது. மூன்றாவது மருமகள் வந்தபின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் கிளம்புகிறது. இதை சற்றே சுவாரசியமாக காமிக்க தொடங்கியுள்ளார்கள்.

Gabriella in Marumagale serial

சன் டிவியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மருமகள் 7.22 ரேட்டிங்கோடு ஆறாவது இடத்திலும், 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மல்லி 6.92 ரேட்டிங்கோடு ஏழாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

எட்டாவது இடத்தில் சுந்தரி 6.71 ரேட்டிங்கோடு இருக்க, வானத்தைப்போல 6.68 ரேட்டிங்கோடு ஒன்பதாவது இடத்தையும், சின்ன மருமகள் 6.66 ரேட்டிங்கோடு பத்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. 

TRP வரிசைசீரியல்TRP ரேட்டிங்
1சிறகடிக்க ஆசை10.11 TRP
2பாக்கியலட்சுமி8.46 TRP
3சிங்கப்பெண்ணே7.99 TRP
4கயல்7.79 TRP
5பாண்டியன் ஸ்டோர்ஸ் 27.62 TRP
6மருமகள்7.22 TRP
7மல்லி6.92 TRP
8சுந்தரி6.71 TRP
9வானத்தைப்போல6.68 TRP
10சின்ன மருமகள்6.66 TRP

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.