Home Serial ஆகஸ்ட் கடைசி வார தமிழ் சீரியல் TRP தரவரிசை!

ஆகஸ்ட் கடைசி வார தமிழ் சீரியல் TRP தரவரிசை!

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் டாப் 10 TRP தரவரிசையில் தமிழ் சீரியல்கள் பிடித்துள்ள இடங்களும் தகவல்களும்.

by Vinodhini Kumar

2024-ம் ஆண்டில் 34வது வாரத்துக்கான TRP தரவரிசை இன்று வெளியானது. இந்த வாரமும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை முதலிடம் பிடித்திருந்தாலும், விஜய் டிவி, சன் டிவி என இரண்டு முன்னணி சேனல்களும் சரிவை சந்தித்திருக்கின்றன.

Siragadikka Aasai retains No. 1 in TRP தரவரிசை

ஜீ தமிழ் தொலைக்காட்சி மட்டுமே இந்த வாரம் ஏற்றத்தைக் கண்டிருக்கிறது. சேனல்களுக்கு இடையேயான TRPயில் சன் டிவி 790 TRPயுடன் முதலிடத்தில் இருக்க, விஜய் டிவி 618 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

சன் டிவியின் ஷேர் 37.3 சதவிகிதமாகவும், விஜய் டிவியின் ஷேர் 29.2 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. காரணம் கடந்த வாரம் சன் டிவி 833, விஜய் டிவி 664 TRP புள்ளிகளுடன் இருந்தன. இந்த வாரம் இரண்டு சேனல்களுமே முறையே 43, 46 TRP புள்ளிகள் குறைந்திருக்கின்றன.

Zee thamizh

மாறாக ஜீ தமிழ் தொலைக்காட்சியோ 427 TRP புள்ளிகள் மட்டுமல்லாது 20.2 சதவிகித ஷேர் பெற்று மூண்றாம் இடம்பிடித்திருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு ஜீ தமிழ் மீண்டும் 20 சதவிகித ஷேரை எட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்லாத கிராமங்களுக்கான ரூரல் ரேட்டிங்கில் ஜீ தமிழ் விஜய் டிவியை வீழ்த்தி இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. ரூரல் ரேட்டிங்கில் சன் டிவி 719 TRP புள்ளிகளும், ஜீ தமிழ் 412 புள்ளிகளும், விஜய் டிவி 404 புள்ளிகளும் பெற்றிருக்கிறது.

இந்த வார டாப் 10 சீரியல்கள்

TRP தரவரிசைதமிழ் சீரியல்TRP மதிப்பு
1சிறகடிக்க ஆசை9.42 TRP
2சிங்கப்பெண்ணே7.74TRP
3கயல்7.56TRP
4மூன்று முடிச்சு7.12TRP
5பாக்கியலட்சுமி7.12TRP
6மல்லி7.04TRP
7மருமகள்6.88TRP
8பாண்டியன் ஸ்டோர்ஸ்6.75TRP
9சின்ன மருமகள்6.43TRP
10சுந்தரி6.30TRP

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.