விஜய் டிவியில் புது முகங்களுடன் வருகிறது புது சீரியல். ‘அய்யனார் துணை’ என்ற சீரியலின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது, இந்த புது சீரியலின் நடிகர் நடிகைகள் யார்? ‘அய்யனார் துணை’ சீரியலின் கதைக்களம் என்ன? என பல சுவாரசியமான ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடுத்த சீரியல் ‘அய்யனார் துணை’. இதில் ஏற்கனவே சன் டிவியில் மக்களின் மனம் கவர்ந்து பட்டித் தொட்டோயெங்கும் பரவலாக பேசப்பட்ட ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் நடித்த நடிகை மதுமிதா கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு துணையாக இக்கதையின் மற்றொரு முக்கிய பாத்திரமாக நடிக்கிறார் நடிகர் அரவிந்த் சேஜூ. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காவல் நிலையத்தில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்க செல்ல, தன்னுடைய குடும்பத்தை பற்றி புகழ்ந்து பேச, அதற்கு மாறாக அவரின் குடும்பம் அமைந்துள்ளது காட்டப்படுகிறது.
இவள் வாழ வந்த வீடு துணையாய் இருக்குமா..? வினையாய் முடியுமா..? 🤔 அய்யனார் துணை – விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #AyyanarThunai #VijayTelevision #VijayTV pic.twitter.com/Hijv6yC0NW
— Vijay Television (@vijaytelevision) January 2, 2025
காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் போல தெரிந்தாலும் கதையின் நாயகி மற்றும் நாயகன் இருவருக்கும் ஒரு இடைவேளை இருப்பதும், இதில் நாயகனின் குடும்பத்தில் நாயகனுடன் சேர்த்து 4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை மட்டுமே இருப்பது காட்டப்படுகிறது. எப்போதும் சண்டை சச்சரவாக, ஒரு பெண் இல்லாத வீடு எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில் வாழப்போகும் வீடு இருக்க, “இவள் வாழ வந்த வீடு துணையாய் இருக்குமா..? வினையாய் முடியுமா..?” என்ற கேள்வியுடன் தொடங்குகிறது இந்த சீரியல். இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் மற்றும் நாள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விஜய் டிவியில் வரப்போகுது புது சீரியல்: “Sindhu Bairavi Kacheri Arambam”
அய்யனார் துணை சீரியல் நடிகர் நடிகைகள்
மதுமிதா – நிலா
அரவிந்த் சேஜு – சோழன்
முன்னா – சேரன்
அருண் கார்த்தி – பாண்டியன்
பர்வேஸ் – பல்லவன்
ரொசாரியோ – நடேசன்