விஜய் டிவியில் trp ரேட்டிங்கில் முன்னணி வகிக்கும் ‘Baakiyalakshmi’ மற்றும் ‘Pandian Stores 2’ prime time சீரியல்கள் தற்போது பரபரப்பான கதை களத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாத இறுதி வாரத்தின் ப்ரோமோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
Pandian Stores 2
இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘Pandian Stores 2’ தொடரில், இதற்கு முன் ஒளிபரப்பான சீசன் 1-ல் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் ஆன “மூர்த்தி, மீனா, ஜீவா” இந்த சீசனில் “பாண்டியன், மீனா மற்றும் செந்தில்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த தொடரின் கதைக்களம் பரபரப்புக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம். 72 சவரன் கவரிங் நகையை தங்கம் என்று பொய் கூறி திருமணம் செய்த மயிலின் ரகசியம் அதிரடியாக மற்ற இரு மருமகள்களான மீனா மற்றும் ராஜிக்கு தெரியவருகிறது. ஆனால், அதை யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று மயிலுக்கு இருவரும் சத்தியம் செய்து விடுகின்றனர்.
இதையடுத்து மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான குழலி, (பாண்டியனின் முதல் மகள்) தனது மாமியார் வீட்டில் அதிகாரம் செய்து சண்டை போட்டு தனது அம்மா வீட்டிற்கு வந்துவிடுகிறாள். தனது மகளின் பிரச்சனையை சரி செய்ய பாண்டியன் முயற்சி செய்யும் போது தனது மகளின் உண்மையான சுயரூபத்தை அவள் மாமியார் வீட்டில் தெரிந்து கொள்கிறார்.
அதன் பிறகு, வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்து, ஒற்றுமையாக இருக்கும் தனது மூன்று மருமகள்கள் மீது அதீத மரியாதை பாண்டியன் கதாபாத்திரத்திற்கு எழுகிறது. மருமகள்கள் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மறைத்து வைத்துள்ள பல ரகசியங்கள் வெளியே வந்தால் அதே நம்பிக்கை நீடிக்குமா..? பார்க்கலாம்.
Big Boss நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் 5 முக்கிய Serial -களின் நேரம் மாற்றப்பட்டது.
Baakiyalakshmi
2020 ஆம் ஆண்டு தொடங்கிய “Baakiyalakshmi – ஒரு இல்லத்தரசியின் கதை” என்ற மெகா சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து தற்போது வரை, prime time என்று அழைக்கப்படும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பாக்கியலட்சுமியின் ஹோட்டல் பெயரை கெடுக்க கோபி போட்ட திட்டம் பாதி நிறைவேறி முழுமையாக நிறைவேறுவதற்கு முன் பாக்கியா சதியை முறியடித்து வென்றுவிடுகிறாள். இதற்கு காரணமாக இருந்த கோபியை போலீஸிடம் புகார் செய்ததன் விளைவாக கோபி கைது செய்யப்படுகிறார். ஆனால் அதே நாளில் ஜாமீனில் வெளியே வந்து பாக்கியாவிடம் தனது வன்மத்தை சண்டைபோட்டு வெளிப்படுத்துகிறார், கோபி.
தனது அப்பாவின் அக்கறையின்மை, வன்மம், பொறுப்பற்ற செயலை சுட்டிக்காட்டி இனியா, அவள் அப்பாவிடம் சண்டையிடுகிறாள். இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் தனது மகளின் உணர்ச்சி மிகுந்த சொல்லும், கண்ணீரும் கோபியின் மனதை புண்படுத்தி விட, car-ல் பயணிக்கும் கோபிக்கு நெஞ்சு வலி வருகிறது, உதவிக்கு இறுதியில் பாக்கியாவிற்கே தொலைபேசியில் அழைப்பது போல் ப்ரோமோவில் காண்பிக்கப்படுகிறது.
இது எல்லாத்துக்கும் கோபி தான் காரணம்.. 😠
— Vijay Television (@vijaytelevision) November 25, 2024
பாக்கியலட்சுமி – திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/XAYNerPoXa
பாக்கியா மற்றும் கோபிக்கு இடையே இருக்கும் சண்டை மற்றும் மனக்கசப்பு இதன் மூலம் முற்றிலும் முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது என அனுமானிக்கப்படுகிறது.
நான்கு வருடத்திற்கு மேல் ஒளிபரப்பாகும் “Baakiyalakshmi” விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த தொடரில் முடிவுக்கு வரவேண்டிய பிரச்சனை/plot என்றால், கோபி மற்றும் பாக்கியாவிற்கு இடையே இருக்கும் தவறான புரிதல்கள் மட்டுமே ஆகும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]