விஜய் டிவியில் ஒளிபரப்பாகி Baakiyalakshmi சீரியலின் இன்றைய (04-05-2024) எபிசோடின் ஹைலைட்ஸ்! கடந்த ஒருவாரமாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாகியிருக்கும் விஷயம் பாக்கியா வீட்டினருக்கு எப்போது தெரியவரும் என்கிற ட்விஸ்ட்டிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இன்றைய எபிசோடும்!
இன்றைய எபிசோடில் எழில் அமர்தாவிடம் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லி புரிய வைக்கிறான். மறுபக்கம் கோபி வீட்டுக்கு வந்து ராதிகாவிடம் சாப்டியா என்று கேட்க இன்னும் இல்ல என்று சொல்லும் ராதிகா ”நீங்க சாப்டீங்களா” என்று கேட்டதும் கோபி ”நான் நல்லா சாப்பிட்டேன்” என்று சொல்கிறான். ”அதானே உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் கவலை” என்று கோபப்படுகிறாள் ராதிகா. அடுத்து ”குழந்தைக்கு கிஃப்ட் வாங்கிட்டீங்களா?” என்று கேட்க ”நீ சொன்ன மாதிரியே செயினும் வளையலும் வாங்கிட்டேன்” என்று சொல்கிறான்.
அடுத்து கோபி ”நாளைக்கு மட்டும் ஃபங்ஷன்ல நீ வாந்தி எடுக்காம இருக்கணும்” என்று சொல்ல, ராதிகா ”நான் என்ன வேணும்னா எடுக்கிறேன்… இன்னைக்கு இவ்வளவு பேசுறீங்க அன்னைக்கி எல்லாத்தையும் யோசிச்சு இருக்கணும்” என்று கோபப்பட்டு திட்டுகிறாள். மேலும் ”நான் வேணும்னா என் அம்மா வீட்டுக்கு போயிட வா” என்று கேட்க கோபி ”அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்கிறான். நாளைக்கு ஃபங்ஷன் முடிஞ்சதும் வீட்ல நம்ம விஷயத்தைப் பத்தி பேசுங்க என்று ஆர்டர் போடுகிறாள்.
மறுபக்கம் பாக்யா மறுநாள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கட் பண்ணிக் கொண்டிருக்க எழிலும் அமிர்தாவும் இங்கு வந்து பாக்யாவுக்கு உதவி செய்ய பாக்யா ”உங்க அப்பா எதுக்கு இன்னும் இந்த வீட்ல இருக்காரு” என்று கேள்வி கேட்கிறாள். நாளைக்கு ”பங்க்ஷன் முடிஞ்சதும் இதை பத்தி பேசி அவரை அனுப்பி வைக்கணும்” என்று முடிவு எடுக்கின்றனர்.
மறுநாள் பங்க்ஷன் தொடங்க எல்லாரையும் கூப்பிட்டு வைத்து இனியா ஃபேமிலி போட்டோ எடுக்கிறாள். அதன் பிறகு ஜோசப் குடும்பத்தினர் வீட்டுக்கு வர பாக்யாவின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்க ஜோசப்பை பார்த்து ஈஸ்வரி முகத்தை திருப்பிக் கொள்கிறாள். மரியம் மேலே இருக்கும் ஜெனியை பார்க்க ரூமுக்கு சென்று விடுகிறால்.
அதைத்தொடர்ந்து குழந்தையை தொட்டிலில் போட்டு விடலாம் என்று சொன்னதும் ஜெனி குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே வருகிறார். ஜோசப் குழந்தையை வாங்கி கொஞ்சிய பிறகு ”திரும்பத் திரும்ப திரும்ப எதுக்கு குழந்தைக்கு பெயர் வைக்கணும். அதான் ஏற்கனவே வச்சாச்சுல” என்று பழையதை பேச ”இது எங்க வீட்டு வாரிசு… நாங்க தான் பேர் வைப்போம்” என்று பிரச்சனை செய்கிறார். இருவரது வாக்குவாதத்தால் வீடே கலவரமாக மாற தொடங்குவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com