விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Baakiyalakshmi’. இந்த சீரியலில் இன்றைய (07-05-2024) எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரியை தனியாக அழைத்துச் செல்ல ஈஸ்வரி எதுக்குடா இந்த வெயில்ல கூட்டிட்டு வந்த என்று அடுக்கடிக்காக கேள்வி கேட்கிறார். அடுத்து கோபியிடம் ”உனக்கு ஏதாவது பிரச்சனையா” என்று கேட்க ”ஏன் அப்படி கேட்கறீங்க” என்று சொல்கிறான். ”இல்ல ஒரு வாரமா நீயும் ராதிகாவும் சரியா இல்ல…. நீயும் ஏதோ சொல்ல வர.. ஆனா சொல்ல மாட்ற” என்று கேட்க கோபி குழந்தையை பற்றி பேச தொடங்குகிறான்.

”நீங்க இப்ப பாட்டி ஆனா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?” என்று கேட்டதும் ஈஸ்வரி அதான் நான் ஏற்கெனசே பாட்டி ஆகிட்டேனே என்று சொல்கிறார். திரும்பவும் பாட்டி அம்மா என்று கேட்க ஈஸ்வரி எழிலுக்கு குழந்தை பிறக்கப் போவதாக நினைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்த கோபி அவரது முகத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறான்.
நான் கூட அவன்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் என்று ஈஸ்வரி சொல்ல கோபி யாரைப் பத்தி பேசறீங்க என்று கேட்க ஈஸ்வரி எழிலை பற்றி என்று சொன்னதும் நான் அவன பத்தி சொல்லல என்று கோபி சொல்ல அப்போ செழியனுக்கா என்று கேட்க கோபி டென்ஷனாகி எனக்குத்தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வரி ”இப்ப இருக்கும் நிலைமையில் இதெல்லாம் தேவையா? இந்த குழந்தை வேண்டாம், உன் புள்ளைங்க மதிக்க மாட்டாங்க, ராதிகாவும் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் தானே இருக்கா” என்று கேட்க கோபி ”அவ குழந்தை பெத்துக்கலாம்னு சொல்றா” என்று அடுத்த அதிர்ச்சி கொடுக்கிறான்.
”நான் அவ கிட்ட பேசுறேன் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி வீட்டுக்கு வருகிறார் ஈஸ்வரி. மேலும் ”என்னதான் நடந்தாலும் பாக்கியா எங்களை விட்டு போகாம இருக்கா… எங்களுக்கு அவதான் முக்கியம்… அதுக்கு அப்புறம் தான் நீ” எனவும் அதிர்ச்சி கொடுக்கிறார் ஈஸ்வரி.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி பதட்டமாக இருப்பதை பார்த்து பாக்கியா என்னாச்சு என்று கேட்க வெயில்ல போனா வேர்க்க தான் செய்யும் என்று சமாளிக்கிறார். இல்ல பதட்டமா இருக்கீங்களே என்ன விஷயம் என்று கேட்க கோபி நான் எங்க அம்மாவ வெளியில கூட்டிட்டு போயிருந்தேன்… உன்கிட்ட எங்க போறோம் எதுக்கு போறோம்னு சொல்லிட்டு தான் போகணும்.. என்று கோபப்படுகிறான்.
ஈஸ்வரி ராதிகா எங்கே என்று கேட்டு முடியாமல் மாடிக்கு ஏறி வந்து ராதிகாவிடம் ”இது எத்தனையாவது மாசம்” என்று கேட்க இரண்டு மாசம்னு நினைக்கிறேன் என்று சொல்ல ”இந்த குழந்தை வேண்டாம்” என்று அதிர்ச்சி கொடுக்க ”அதை வேணுமா வேணாமானு முடிவு பண்ண வேண்டியது நானும் கோபியும் தான்” என பதிலடி கொடுக்கிறாள் ராதிகா. இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]