விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Baakiyalakshmi. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
மொட்டை மாடியில் செல்வி உனக்கு உண்மையாகவே வருத்தமாவே இல்லையா என்று பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறாள். பாக்கியா ”கோபிக்கு எப்பவும் என்னை பிடிக்கலன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு… நான் பவுடர் அடிக்கிறது பிடிக்காது… நான் என்ன பண்ணாலும் அவருக்கு பிடிக்காது. காரணம் அவருக்கு என்னை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. அப்போ எல்லாம் சுயமரியாதையே இல்லாம ஒரு செருப்பு மாதிரி இருந்திருக்கேன். சொந்தமா சம்பாதிக்கும்போது தான் சுயமரியாதை வருது. அவர விவாகரத்து பண்றது தான் நான் செஞ்ச சரியான விஷயம்” என்று சொல்கிறாள் பாக்கியா. ”இனிமே அவர் பேசுறதுக்கெல்லாம் அமைதியா இருக்க மாட்டேன்” என பொங்குகிறார். ”நான் ஒரு நல்ல அம்மாவா இல்லன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு… ஆனா இன்னைக்கு அவர் என்ன பண்ணி இருக்காரு? இனிமே ஏதாவது பேசட்டும் நான் பொறுமையா இருக்க போறது இல்ல” என பொங்குகிறாள்.
இதைத்தொடர்ந்து ஈஸ்வரி தூக்கம் வராமல் தவிக்க ராமமூர்த்தி என்னாச்சு எனக் கேட்க ஒன்னும் இல்ல சாப்பிட்டது ஏதோ செரிக்கல என்று தண்ணீர் குடிக்க வெளியே வருகிறார். ராமமூர்த்தி இவ ஏதோ மறைக்கிறா… கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும் என்று சொல்லிக் கொள்கிறார்.
கோபியும் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரியை பார்த்ததும் இன்னும் நீங்க தூங்கலையா என்று கேட்க நீ சொன்ன விஷயத்தை கேட்டு எப்படிடா தூக்கம் வரும் என்று கோபப்படுகிறார்.
”ராதிகா ஏண்டா இப்படி இருக்கா… சொல்றத கேட்கவே மாட்றா, இந்த குழந்தை பிறந்தால் சரியா இருக்காது. நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க” என்று சொல்ல கோபி ”எனக்கும் உங்கள மாதிரியான கருத்துதான் இருக்கும்மா… நான் ஆரம்பத்திலேயே இந்த குழந்தை வேண்டாம்னு சொன்னேன். ஆனா, அவ கேட்கல. இப்போ எல்லார்கிட்டயும் அவ கர்ப்பமா இருக்கணும்னு சொல்லனும்னு சொல்றா… நான் என்னதான் செய்றது? நெஞ்சு வெடிச்சு செத்துருவேன் போல இருக்கு என்று வருத்தப்படுகிறான். இதனால் ”ஏன்டா கோபி இப்படி பேசுற… சரி விடு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்கிறார்.
மறுநாள் காலையில் கோபி தூங்காமல் ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து இருக்க ராதிகா வாக்கிங் போகலையா என்று கேட்க டயர்டா இருக்கு… அதனால போகல என்று சொல்கிறான். திரும்பவும் குழந்தை பற்றிய பேச்சு வர ”உங்க வீட்ல எப்ப எல்லார்கிட்டயும் சொல்ல போறீங்க” என்று ராதிகா கேட்க கோபி சொல்றேன் என்று சொன்னதும் ”எப்ப உங்க அம்மா ஏதாவது பண்ண பிறகா” என்று கேட்கிறாள். கோபி எங்க அம்மா என்ன பண்ண போறாங்க என கேட்க அவங்களுக்கு தான் இந்த குழந்தை பொறக்கிறது பிடிக்கலையே சினிமால வர மாதிரி ஏதாவது கலந்து கொடுத்து கலைச்சிட்டாங்கன்னா என்று பேச கோபி அதிர்ச்சி அடைகிறான்.
ரொம்ப டூ மச்சா பேசுற என்று கோபப்பட நான் உண்மையைத்தான் சொல்றேன். உங்க அம்மா அப்படி பண்ணாலும் பண்ணுவாங்க என்று ராதிகா திரும்ப திரும்ப சொல்ல, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. பிறகு கோபி வாக்கிங் போயிட்டு வந்து எல்லாரும் வைத்து உண்மையை மொத்தமா போட்டு உடைக்கிறேன் போதுமா என கிளம்பி செல்கிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]