விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Baakiyalakshmi’. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
ஈஸ்வரி சோபாவில் எதையோ யோசித்தபடி உட்கார்ந்திருக்க ராமமூர்த்தி ”என்னாச்சு?” என்று கேட்க ஒன்றும் இல்லை என்று தண்ணீர் குடிக்க போகும் போது ராதிகா எதிரே வந்து நிற்க இருவரும் ஒருவர் பேசியதை ஒருவர் நினைத்து முறைத்துக் கொள்கின்றனர்.
ராதிகாவின் அம்மா வீட்டுக்கு வர, ராதிகா அவரிடம் கோபியின் அம்மா ஈஸ்வரி ஈஸ்வரி கர்ப்பத்தை கலைக்க சொன்ன விஷயத்தை சொல்ல அவர் கோபப்பட்டு சண்டைக்கு கிளம்ப ராதிகா தடுத்து நிறுத்துகிறார். ”யார் என்ன சொன்னாலும் நீ உன்னுடைய முடிவுல உறுதியா இரு, குழந்தையை கலைக்கணும் என்ற எண்ணம் உனக்குள்ள வரவே கூடாது” என்று சொல்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து திரும்பவும் மேலே போக எழுந்து செல்லும்போது படிக்கட்டின் அருகே வந்ததும் ராதிகாவை நினைத்து அங்கேயே நின்று புலம்புகிறான்.
இதைப் பார்த்து கடந்து வரும் பாக்கியா ஈஸ்வரியிடம் வந்து சப்பாத்திக்கு குருமா வேணுமா இல்ல தொக்கு வேணுமா என்று கேட்க கோபி இங்க மனுஷனுக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு இவளுக்கு குருமா வேணுமா தொக்கு வேணுமா இதெல்லாம் ரொம்ப அவசியம் என்று புலம்புகிறான்.
கோபி ராதிகாவுக்கு பயந்து மீண்டும் சோஃபாவில் வந்து உட்கார்ந்து விட கீழே வந்த ராதிகா, கோபியை எப்ப வந்தீங்க என்று தண்ணீர் கொண்டு போய் கொடுத்து விஷயத்தை சொல்லுங்க என்று மிரட்ட இன்னொரு பக்கம் ஈஸ்வரி அதெல்லாம் சொல்லமாட்டான் உன்னால முடிஞ்சதை பண்ணிக்க என்று பதிலடி கொடுக்க ராமமூர்த்தி இவர்கள் ரகசியமாக பேசிக் கொள்வதை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.
கோபி முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல போறாரு என்று ராதிகா இனியா மூலமாக எல்லாரையும் கீழே கூட்டி வர சொல்ல மொத்த குடும்பமும் ஒன்றாக கூடிவிட நடக்கப் போறதை ஆவலாக பார்க்க பாக்யா பாப்கார்ன் உடன் டைனிங் டேபிளில் கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கை பார்க்க தொடங்க கோபி இதை பார்த்து இன்னும் கடுப்பாகிறான்.
கீழே வந்த எல்லாரும் என்ன விஷயம் என்று கேட்க தொடங்க ஈஸ்வரி அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளிக்க ராதிகா இல்லை உங்க அப்பா முக்கியமான விஷயம் சொல்லனுமா சொல்லுங்க கோபி என்று கொடைச்சல் கொடுக்க கோபி சொல்ல முடியாமல் தவிக்க இனியா பாக்யாவை பார்த்ததும் உனக்காவது விஷயம் தெரியுமா என்று கேட்க எழுந்து வந்த பாக்யா உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு என்று மொத்த உண்மையையும் போட்டு உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]