இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம் பிடித்து, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ‘Baakiyalakshmi‘. ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில், ஒரு அப்பாவி இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல், ஒவ்வொரு குடும்பத் தலைவியின் தினசரி வாழ்க்கையை பிரதிபலித்தது.
கோபி Baakiyalakshmi -யை ஏமாற்றி, மறுமணம் செய்தது இந்த சீரியலின் பெரும் திருப்பமாக அமைந்தது. அதன் பின் கோபி கதாப்பாத்திரத்துக்கு நிஜமாகவே மக்கள் மத்தியில் திரளான எதிர்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் கோபி செய்யும் அக்கிரமாக்களை பார்த்து தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் கொந்தளித்து ஆத்திரமடைந்து வருகிறார்கள் மக்கள்.
இந்த வாரம் ஞாயிற்று கிழமை (21/07/2024) சிறப்பு எபிசொட் ஒளிபரப்பாகிறது. மாலை 4.30 முதல் 6.30 மணி வரை இரண்டு மணி நேரம் மெகா எபிசோடாக வரவிருக்கிறது. இந்த வாரம் ‘சென்னையின் சிறந்த உணவை’ தேர்ந்தெடுக்கும் போட்டி நடக்க, அதில் கோபி நடத்திவரும் உணவகம் பங்கேற்கிறது. மற்றொரு பக்கம் பழனிசாமி, பாக்கியலட்சுமியை இந்த போட்டியில் பங்கேற்கும்படி கூற, ஈஸ்வரியும் அறிவுறுத்துகிறார்.

போட்டியில் வெற்றியடைய ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் கேட்க கோபி கேட்கிறார், அதை தடுத்து “இந்த போட்டியில் பாக்யா தான் ஜெயிப்பாள்” என அதிரடியாக குளறிவிடுவார். இதனால் கோபமடைந்த கோபி, போட்டியில் தான் ஜெயிக்கபோவதாக பாக்யாவிடம் சவால் விடுகிறார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த இரண்டு மணி நேர Baakiyalakshmi எபிசோடுக்கும் வார இறுதியில் நல்ல பார்வையாளர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]