சின்னத்திரையில் நடிகர்/நடிகை அல்லது முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் விலகி செல்வது சமீபத்தில் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு லான்ச் செய்யப்பட்ட ரொமான்டிக் மெகா தொடர் ‘Idhayam’. ஆதி என்ற தொழிலதிபர் பாரதி என்ற விதவை பெண்ணை காதலிக்க தொடங்குகிறார். ஆனால் அவர்களின் வாழ்க்கை பாரதி வாழ்க்கையில் நடந்த ஒரு துயர நிகழ்வால் இணைக்கப்படுகிறது.
முதலில் S.N.ராஜ்குமார் இயக்கி வந்த இந்த தொடரை வினோத் குமார் என்பவர் 110 வது எபிசோட் முதல் இயக்கி வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது, இதில் ஆதி & பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரிச்சர்ட் ஜோஸ் & ஜனனி அசோக் ஜோடி பெருவாரியான இளம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர் ‘Raman Thediya Seethai’!!
‘Idhayam’ தொடரில் இருந்து விலகிய ஜனனி!
600+ எபிசோடுகள் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் கதைக்களம் ஆரம்ப காலத்தில் இருந்தது போல சுவாரசியம் நிறைந்த ஒன்றாக தற்போது இல்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் நிலவி வந்தது. மேலும் நேற்று நடிகை ஜனனி அசோக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘Idhayam’ சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடரின் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான வரிகளையும் பதிவிட்டுள்ளார்.
Read More: ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
‘Idhayam’ தொடருக்கு குட் பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், இந்த சீரியல் மூலம் தனக்கு கிடைத்த அன்பிற்கு சிரம் தாழ்ந்து நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ரசிகர்களின் அளவுகடந்த அன்பு மற்றும் ஆதரவு தனது பயணத்தில் முன்னேறி செல்ல மிகவும் உதவுவதாக கூறுகிறார். இந்த திடீர் முடிவின் விளைவாக ரசிகர்கள் அந்த தொடரின் பிற நடிகர்கள், இயக்குனரை குற்றம் சாட்ட இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.
தொடரின் ஸ்கிரிப்ட் தனக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் வேறு ஒரு புது கதையில் மீண்டும் வருவேன் என்ற செய்தியையும் பகிர்ந்துள்ளார் நடிகை ஜனனி அசோக்குமார்.
Read More: ‘நீ நான் காதல்’ தொடரில் மீண்டும் இணையும் நடிகை Saai Gayatri
இனி அவருக்கு மாற்றாக யார் நடிக்கவுள்ளார் என்ற செய்தி விரைவில் ‘Idhayam’ தொடரின் குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]