Home Serial இந்த வார டாப் டென் சீரியல்கள் – TRP rating!

இந்த வார டாப் டென் சீரியல்கள் – TRP rating!

ஜூலை கடைசி வாரத்தின் தமிழ் சீரியல்கள் TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. முதல் இடத்தில விஜய் டிவி, இரண்டாவது இடத்தில தொடர்வது யார்?

by Vinodhini Kumar
TRP PositionSerialTRP Rating
1சிறகடிக்க ஆசை 10.74
2பாக்கியலட்சுமி9.07
3பாண்டியன் ஸ்டோர்ஸ்7.85
4சிங்கப்பெண்ணே7.79
5கயல்7.64
6மருமகள்7.19
7சின்ன மருமகள்6.83
8வானத்தைப்போல 6.66
9மல்லி 6.63
10ஆஹா கல்யாணம்6.56

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் தொலைக்காட்சிகளுக்கான TRP ரிப்போர்ட் இன்று வெளியானது. இந்த ஆண்டின் 30-வது வாரத்துக்கான இந்த வார ரேட்டிங்கிலும் விஜய் டிவி தான் முன்னிலை.

Siragadikka Aasai TRP Number 1

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ தொடரே முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், கடந்த வாரம் 11.27 என இருந்த டி ஆர் பி இந்தவாரம் சற்றே குறைந்து 10.74ஆக மாறியிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் ‘பாக்கியலட்சுமி’யின் ரேட்டிங்கும் கடந்த வாரத்தைவிட குறைந்திருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துவருகிறது. ‘பாக்கியலட்சுமி’ இந்த வாரம் 9.07 டி ஆர் பி பெற்றிருக்கிறது.

மூன்றாவது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இடம்பெற்றிருக்கிறது. ஆனால், விஜய் டிவியின் எல்லா சீரியல்களுமே கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் குறைந்திருப்பதால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடந்த வாரம் 8 டிஆர்பியில் இருந்து இந்த வாரம்  7.85 TRP எனக் குறைந்திருக்கிறது. 

Singa Penne

கடந்த சில வாரங்களாக சரிந்துகொண்டேயிருந்த சன் டிவியின் ‘சிங்கப்பெண்ணே’ இந்த வாரம் சற்றே உயர்ந்து நான்காவது இடத்தில உள்ளது. கடந்தவாரம் 7.24 என இருந்த ரேட்டிங் இந்தவாரம் 7.79 என உயர்ந்திருக்கிறது.

ஐந்தாவது இடத்தையும், ஆறாவது இடத்தையும் தொடர்ந்து சன் டிவியின் சீரியல்களே பெற்றிருக்கிறது. ‘கயல்’ 7.64 டிஆர்பி பெற்று ஐந்தாவது இடம்பிடிக்க, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மருமகள்’ சீரியல் 7.19டிஆர்பி பெற்று ஆறாவது இடம்பிடித்திருக்கிறது.

ஏழாவது இடத்தில் விஜய் டிவியின் ‘சின்ன மருமகள்’ 6.83 TRP-யுடன் இருக்க, எட்டாவது இடத்தில் சன் டியின் ‘வானத்தைப்போல’ 6.66 டிஆர்பியுடன் இருக்கிறது. மீண்டும் ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் ‘மல்லி’ சீரியலே 6.63 டிஆர்பியுடன் இடம்பிடிக்க, விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ 6.56 டிஆர்பியுடன் கடைசி இடமான பத்தாவது இடம்பெற்றிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.