Home Serial தொடர்ந்து Siragadikka aasai முதலிடம்… இந்த வார TRP என்ன?!

தொடர்ந்து Siragadikka aasai முதலிடம்… இந்த வார TRP என்ன?!

by Santhiya Lakshmi

சின்னத்திரைக்கான டிஆர்பி ரேட்டிங் இன்று காலை வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து பல மாதங்களாக தமிழின் நம்பர் 1 சீரியலாக இருக்கும் ‘Siragadikka aasai’ தொடர்ந்து இந்த வாரமும் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. 8.91 டிஆர்பி ரேட்டிங் பெற்று முதலிடத்தில் இருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’.

இரண்டாவது இடத்தில் கடந்த சில வாரங்களாக இருந்த ‘பாக்யலட்சுமி’யை முந்திவிட்டு சன் டிவியின் ‘சிங்கப் பெண்ணே’ 8.44 இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. இந்த வாரத்தோடு நிறைவடைந்த சன் டிவியின் முன்னணி சீரியலான ‘எதிர் நீச்சல்’ க்ளைமேக்ஸ் வாரத்தில் 7.91டிஆர்பி புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தோடு நிறைவுசெய்திருக்கிறது.

Siragadikka aasai

சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கயல் 7.74 ரேட்டிங்கோடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. பாக்யலட்சுமி 7.61 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்துக்கு சரிய, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.01 புள்ளிகளோடு ஆறாவது இடத்தையும், சன் டிவியின் ‘வானத்தைப்போல’ 6.83 ரேட்டிங்குடன் ஏழாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. சன் டிவியின் மல்லி சீரியல் 6.46 ரேட்டிங்கோடு எட்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.  விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் 6.35 ரேட்டிங்கோடு ஒன்பதாவது இடத்தையும், சன் டிவியின் சுந்தரி மற்றும் விஜய் டிவியின் சின்ன மருமகள் என இரண்டு சீரியல்களுமே 6 டிஆர்பி புள்ளிகளோடு பத்தாவது இடத்தைப்பிடித்திருக்கின்றன.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.