Home Serial அடுத்த Batch பசங்க களமிறங்கும் Kana Kaanum Kaalangal சீசன் 3.

அடுத்த Batch பசங்க களமிறங்கும் Kana Kaanum Kaalangal சீசன் 3.

விஜய் டிவியில் 2006-ல் ஒளிபரப்பாகி 90's kids-களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக 3 ஆண்டுகள் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் சீசன் 2 முடிந்து, சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. 

by Sudhakaran Eswaran

விஜய் டிவியில் 2006-ல் ஒளிபரப்பாகி 90’s kids-களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக 3 ஆண்டுகள் ஒளிபரப்பான Kana Kaanum Kaalangal சீசன் 2 முடிந்து, சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. 

பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் வகையில் 2006-ல் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று 3 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் Kana Kaanum Kaalangal. 11th, 12th படிக்கும் மாணவர்களின் பள்ளி வாழ்வில் ஏற்படும் கஷ்டம், மகிழ்ச்சி, பள்ளி பருவ காதல், நட்பு, ஈகோ, குடும்ப சூழ்நிலை, போட்டி ஆகியவற்றை கொண்டு எடுக்கப்பட்ட தொடர். 

பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையை மையமாக வைத்தும் தொடர் உருவாக்கப்பட்டது. பின்னர் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடரின் மற்றொரு பாகத்தையும் உருவாக்கப்பட்டனர். கல்லூரி பருவ சீசனில் 2 தொடரும், பள்ளி பருவ கதையில் 2 சீசன் முடிந்து 3 – வது சீசன் தொடங்கவுள்ளது.

பள்ளி பருவ கதையின் முதல் சீசனை பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அடுத்த சீசனை ரமேஷ்பாரதி, ஜஸ்வினி ஜே, சிவ அரவிந்த், மனோஜ், சிதம்பரம் மணிவன்மன் போன்றோர் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் ஒளிபரப்பானது.

கனா காணும் காலங்கள் தொடரின் டைட்டில் பாடலான “கனவுகள் காணும் வயசாச்சு, மனசுல ஆசை முளைச்சாச்சு, கனவுகள் காணும் வயசாச்சு, இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு” என்ற டைட்டில் சாங் விஜய் ஆண்டனி அவர்களின் இசையில் பாடப்பட்டது.  

சீசன் 1-ல் பயன்படுத்திய டைட்டில் சாங் தொடர்ந்து சீசன் 2, சீசன் 3 என வெளியான சீசன் அனைத்திலும் இதே டைட்டில் சாங் தான் இடம் பெற்றுள்ளது. 

ஹேமலதா, மோனிஷா ரவிசங்கர், யுதன் பாலாஜி, இர்ஃபான், எஸ். ஷேவா, ஸ்ரீராம், விக்னேஷ் குமார், பிரியா அட்லி, கிரண் கோண்டா ஆகியோர் சீசன் 1 – ல் நடித்திருந்தனர். இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா இந்த தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீசன் 1 முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் சீசன் 2 ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் யூடூப் மூலம் பிரபலமானவர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள், சின்ன திரை நடிகர்கள் போன்றோர் நடித்திருந்தனர்.  

பரத், சங்கீதா, அரவிந்த் சேஜு, ராஜா வெற்றி பிரபு, இர்ஃபான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், ஆஷிக் கோபிநாத், விஸ்வ மித்ரன், கீர்த்தன் சுபாஷ், சுரேந்தர், கல்யாணி, KPY திடியன், TSK, நடிகர் ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். 

Kana Kaanum Kaalangal season 3
Source: Instagram

சீசன் 2 கிட்டத்தட்ட 130 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது. பள்ளி மாணவர்களின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடரில் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பப்பட்டது. 

இதனை தொடர்ந்து தற்போது சீசன் 3 ஒளிபரப்பாகவுள்ளது. புது தீம் மியூசிக், புது Batch, புது மாணவர்கள் என இந்த சீசன் களைகட்ட காத்துக்கொண்டிருக்கிறது. 

அனிருத், பானு, ஜபகர், ஜாஸ்மின், மௌனிகா, பரத், பர்வீன், குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட சக்தி என பலரும் நடித்துள்ளனர். இயக்குனராக கென்ராய்சன், நவீன் இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.