பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் தினமும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை இதில் சில சீரியல்கள் மட்டுமே 1000 எபிசோடுகளை கடந்து சென்று சாதனை படைத்திருக்கிறது. அப்படி 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சீரியல்களின் லிஸ்ட் இதோ…
சரவணன் மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியல் 2011-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி முதல் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை மூன்று சீசன்களாக மொத்தம் 1901 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலின் சீசன் 1 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி வரை மொத்தம் 1448 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 30-ஆம் தேதி முதல் இதன் சீசன் 2 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மௌன ராகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம்’. இந்த சீரியல் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி வரை இரண்டு சீசன்களாக மொத்தம் 1380 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
ஈரமான ரோஜாவே
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘ஈரமான ரோஜாவே’. இந்த சீரியல் 2018-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி வரை இரண்டு சீசன்களாக மொத்தம் 1309 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
ராஜா ராணி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’. இந்த சீரியல் 2017-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி வரை இரண்டு சீசன்களாக மொத்தம் 1307 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை இரண்டு சீசன்களாக மொத்தம் 1169 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் 2020-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி முதல் தற்போது வரை 1100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த சீரியல் 2018-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி வரை இரண்டு சீசன்களாக மொத்தம் 1055 எபிசோடுகள் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]