“மணமகளே வா” Serial ஜூலை 15-ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை சன் டிவியில் பகல் 12.30 – 1.00 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.
சன் டிவி, சீரியலுக்கு பேர் போன சேனல் என்றே சொல்லலாம். காலை முதல் இரவு வரை 20 சீரியல் வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதற்க்கு முன்பு ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வந்த நிலையில் இருந்தது. மேலும் சில சீரியல்கள் தற்போது புதிதாக ஆரம்பித்துள்ளது. சீரியல்கள் புதிதாக வருகிறது என்றாலே அதற்கான ஹைப் மக்கள் மத்தியில் நிச்சயம் ஏற்படும்.
திருமகள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவு அறிமுகமான ஹரிகா மணமகளே வா சீரியலில் நடிக்கும் போது அவருக்கான எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது சீரியலனா “மணமகளே வா” திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12.30- 1.00 வரை ஒளிபரப்பாகவுள்ளது.
வைசாக் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த சீரியலில் ஹரிகா சாது முக்கியமாக லீட் ரோலில் நடிக்கவுள்ளார். இவர் இதற்க்கு முன்பு திருமகள் சீரியலில் நடித்திருந்தார்.
அழகான குடும்பம் அதில் சொர்க்கத்தில் இருப்பதை போல வாழும் ஹரிகா. அவரது அப்பா எதோ ஒருவகையில் மனவருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அதனை சரி செய்து அப்பாவை சந்தோஷப்படுத்தும் எண்ணம் கொண்ட ஹரிகா. இவ்வாராக ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விக்கி ரோஷன் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது அக்கா, தங்கைகளுக்கு திருமணம் முடித்த பின்பு திருமணம் செய்ய போவதாக இருக்கும் ஹீரோ. விக்கி ரோஷன் குடும்பத்தில் இருக்கும் அக்கா, தங்கைகளின் அட்டகாசம் சீரியலுக்கு கூடுதல் பலம்.
வீட்டிற்கு தெரியாமல் தோழியின் திருமணம் நடைபெறும் போது அதனை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி, இரு வீட்டாரையும் சமாதானம் செய்யும் ஹரிகா இதனை அறியாத அவரது தோழி. மறுபுறம் விக்கி ரோஷன் வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண் அவரது அக்கா செய்யும் சேட்டையில் பயந்து விடுகிறது என ஆரம்பமே விறுவிறுப்பாக செல்கிறது.
இந்த சீரியல் ஒளிபரப்பாகி 2 நாட்கள் ஆனா நிலையில் பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றதுள்ளது. வரும் காலங்களில் சன் டிவியின் டாப் 5 சீரியலில் ஒன்றாக வருவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது. அந்த அளவிற்கு சீரியல் ரசிக்கும்படியாக இருந்து வருகிறது.

சேனல் | சன் டிவி |
மொழி | தமிழ் |
நடிகர்கள் | ஹரிகா சாது, விக்கி ரோஷன். |
ஒளிபரப்பு தேதி | ஜூலை 15, 2024. |
நேரம் | பகல் 12.30 – 1.00 |
OTT தளம் | Sun NXT |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]