வியாழக்கிழமை என்றால் டெலிவிஷன் அலுவலகங்கள் ப்ளஸ் 2 ரிசல்ட் வெளிவரும் செண்டர் போல மாறிவிடும். காரணம் ஒவ்வொரு வியாழனும் வெளியாகும் டிஆர்பி. தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்துவருவதால் ப்ரைம் டைம் தொடர்களின் ரேட்டிங் சரிகிறது. அதேசமயம் பள்ளிக்குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் மதிய நேர தொடர்களின் ரேட்டிங்கும் குறைந்துவருவதால் ஒட்டுமொத்தமான என்டெர்டெய்ன்மென்ட் சேனல்களின் வளர்ச்சி குறைந்துகாணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக விஜய் டிவி தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்து வருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜெனரல் என்டர்மெய்ன்மெண்ட் சேனல்கள் (GEC) என மொத்தம் 8 சேனல்கள் உள்ளன. சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, கலர்ஸ் தமிழ், பாலிமர், ஜெயா டிவி, ராஜ் டிவி ஆகியவை இதில் அடங்கும். இந்த எட்டு சேனல்களின் ஒட்டுமொத்த ஜிஆர்பி 2500க்கும் மேல் எப்போதும் இருக்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் ஜிஇசி சேனல்களின் நம்பர் 2200 புள்ளிகளுக்குள் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஜிஆர்பி ஸ்போர்ட்ஸ் சேனல்களுக்கு சென்றுவிட்டது.
கடந்த வார ரேட்டிங்படி ஜிஇசி சேனல்களின் ஒட்டுமொத்த ஜிஆர்பி 2164 புள்ளிகள் இருந்த நிலையில் இந்த வாரம் சற்றே கூடி 2196 ஜிஆர்பி புள்ளிகளாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 32 புள்ளிகள் கூடியிருந்தபோதும்Vijay TVயின் ஜிஆர்பி சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த வாரம் 630 ஜிஆர்பி புள்ளிகளுடன் இருந்த விஜய் டிவியின் ரேட்டிங் இந்தவாரம் 619-ஆக 11 புள்ளிகள் குறைந்திருக்கிறது. கடந்தவாரம் 874 புள்ளிகளுடன் இருந்த சன்டிவியின் ரேட்டிங் 872 ஆக வெறும் 2 புள்ளிகள் மட்டுமே குறைந்திருக்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக ஜீ தமிழ் சேனலின் ஜிஆர்பி 18 புள்ளிகள் கூடியிருக்கிறது. கடந்த வாரம் 385 ஜிஆர்பி புள்ளிகளாக இருந்த நிலையில் இந்தவாரம் 403 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது ஜீ தமிழ்.
இதைவிட ரூரல் என சொல்லப்பட்டும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களைத்தவிர்த்த ரேட்டிங்கில் எப்போதும் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் விஜய் டிவி மூன்றாவது இடத்துக்குப்பின் தங்கியிருக்கிறது.
ரூரல் ரேட்டிங்படி சன்டிவி 742 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்க, ஜீ தமிழ் 437 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவி 432 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்குப்பின் தங்கியிருக்கிறது.
Quote: Zee Tamil’ல் ரிலீஸாகும் இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்கள்…
சன் டிவியும், ஜீ தமிழும் ப்ரைம் டைமில் புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்திவருவதும், விஜய் டிவி ப்ரைம் டைம் ஷோக்களில் மாற்றம் இல்லாமல் இருப்பதும்தான் இந்த தேக்கத்துக்கு காரணம் என்கிறார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]