Home Serial முதல் வாரமே டாப் டென்னில் வந்த ‘Malli’… முதலிடத்தில் ‘சிறகடிக்க ஆசை’… இந்த வார TRP Rating என்ன தெரியுமா?!

முதல் வாரமே டாப் டென்னில் வந்த ‘Malli’… முதலிடத்தில் ‘சிறகடிக்க ஆசை’… இந்த வார TRP Rating என்ன தெரியுமா?!

முதல் வாரமே டாப் டென்னில் வந்த 'மல்லி'... தொடர்ந்து முதலிடத்தில் 'சிறகடிக்க ஆசை'... இந்த வார TRP ரேட்டிங் என்ன தெரியுமா?!

by Santhiya Lakshmi

1. சிறகடிக்க ஆசை – 8.20 TRP

2. எதிர்நீச்சல் – 7.90 TRP

3. சிங்கப்பெண்ணே – 7.88 TRP

4. கயல் – 7.42 TRP

5. பாக்கியலட்சுமி – 7.19 TRP

6. வானத்தைப்போல – 6.96 TRP

7. பாண்டியன் ஸ்டோர்ட்ஸ் – 6.60 TRP

8. மல்லி – 6.44 TRP

9. சுந்தரி – 6.10 TRP

10. ஆஹா கல்யாணம் – 5.69 TRP

விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ டிவி சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக தொடர்ந்து முதலிடம் பிடித்துவருகிறது. இன்று வெளியாகியிருக்கும் ரேட்டிங்படி 8.20 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’.

2024-ம் ஆண்டின் 18வது வாரம் அதாவது ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான ரேட்டிங் இன்று வெளியானதுல். இதன்படி சிறகடிக்க ஆசை தொடர்ந்து முதடலித்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் எதிர் நீச்சல் 7.90 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடிக்க, சன் டிவியின் சிங்கப்பெண்ணே 7.88 புள்ளிகளுடன் மூன்றாம் இடம்பிடித்திருக்கிறது. நான்காவது இடத்தில் சன் டிவியின் சீரியலான ‘கயல்’ 7.42 புள்ளிகளுடன் இருக்கிறது. விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ 7.19 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 

ஆறாவது இடத்தில் சன் டிவியின் ‘வானத்தைப்போல’ 6.96 புள்ளிகளுடன் இருக்க, ‘பாண்டியன் ஸ்டோர்ட்ஸ்’ 6.60 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் முதல் சன் டிவியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் ‘மல்லி’ சீரியல் 6.44 புள்ளிகளுடன் எட்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் ‘சுந்தரி’ 6.10 புள்ளிகளுடன் இருக்க, பத்தாவது இடத்தில் விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ 5.69 புள்ளிகளுடன் இருக்கிறது.

சன் டிவியின் புதிய தொடரான மல்லி அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.