Home Serial பல திருப்பங்கள், சுவாரசியம் நிறைந்த இந்த வார Tamil Serial.

பல திருப்பங்கள், சுவாரசியம் நிறைந்த இந்த வார Tamil Serial.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த வாரம் எந்த சீரியல் எந்த இடத்தில் என பார்க்கலாம்.  

by Sudhakaran Eswaran

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த வாரம் எந்த Tamil serial எந்த இடத்தில் என பார்க்கலாம்.  

கோடை விடுமுறையால் பெற்றோர்கள், குழந்தைகள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டிவி சீரியல்கள், படங்கள் என ஆர்வமாக பார்த்து வருகின்றனர். சீரியல்கள் பெரும்பாலும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சீரியல்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 18-வது வாரத்தில் டாப் சீரியல்கள் எந்த இடத்தில உள்ளது என பார்க்கலாம்.  

சிங்க பெண்ணே சீரியல்:

கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்து வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்தவாரமும் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து வேலை செய்யும் பெண் எதிர்கொள்ளும் சவால்களை கதைக்கருவாக கொண்டு ஒளிபரப்பப்படுகிறது. இந்த வாரம் 9.44 TRP கொண்டு முதலிடத்தில் உள்ளது.  

கயல்:

கடந்த மாதம் முதலிடத்தில் இருந்து வந்த கயல் சீரியல் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தில உள்ளது. சஞ்சீவ், சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 9.29 TRP புள்ளியில் இடண்டாவது இடத்தில உள்ளது

எதிர் நீச்சல்: 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சீரியலாக இருந்து வருகிறது. குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பெண்கள் எந்த அளவில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை மையப்படுத்தி ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் 8.61 TRP பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.    

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. அண்ணன் தங்கை பாசத்தை கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இந்த வாரம் அண்ணனை பிரிந்து வந்த தங்கை. அடுத்து அண்ணன் என்ன செய்வார் என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 8.05 TRP புள்ளியில் 4-வது இடத்தில உள்ளது. 

சிறகடிக்க ஆசை: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பெரும் வரவேற்பை பெற்றது சிறகடிக்க ஆசை. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் இந்த வாரம் 7.44 TRP புள்ளியில் 5-வது இடத்தில உள்ளது.  

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.82 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது.  

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.36 TRP புள்ளியில் 7-வது இடத்தில உள்ளது. 

பாக்கிய லட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றான பாக்கிய லட்சுமி சீரியலில் இந்தவாரம் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பாக்கியா மற்றும் பிள்ளைகள். அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த வார promo. 6.27 TRP புள்ளியில் 8-வது இடத்தில உள்ளது.  

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2;

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சரவணன்- தங்க மயில் திருமணத்தில் பிரச்சனை. தங்க மயில் குடும்பத்தினர் இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வார்கள் என இந்த வார promo வெளியாகியுள்ளது. 5.81 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது.   

கார்த்திகை தீபம்:

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கார்த்தி மீது காதல் கொண்ட ரம்யா. பள்ளி தோழியை கணவர் என்று தெரியாமல் கார்த்தியை விரும்பும் ரம்யா. என திருப்பங்கள் கொண்ட இந்த வார promo. இந்த வாரம்  5.47 TRP பெற்று 10-வது இடத்தில உள்ளது.   

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.