Home Serial முன்னேறும் ‘சிறகடிக்க ஆசை’… திணறும் எதிர்நீச்சல்… இந்த வார TRP டாப் 10

முன்னேறும் ‘சிறகடிக்க ஆசை’… திணறும் எதிர்நீச்சல்… இந்த வார TRP டாப் 10

Tamil TV Serials TRP Rating : தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுக்கான 19-வார டிஆர்பி இன்று வெளியானது.

by Santhiya Lakshmi

தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுக்கான டிஆர்பி இன்று வெளியானது. இன்றைய TRP ரேட்டிங்படி மீண்டும் முதலிடத்தில் இருக்கிறது விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’. கடந்த வாரம் 8.20  ரேட்டிங் பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் 8.35 ரேட்டிங் பாயிண்ட் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது சிறகடிக்க ஆசை.

Ethirneechal Today's Episode

கடந்தவாரம் இரண்டாம் இடத்தில் இருந்த சன் டிவியின் 9 மணி ப்ரைம் டைம் தொடரான எதிர் நீச்சல் சரிவைக் கண்டிருக்கிறது. கடந்த வாரம் 7.90TRP கொண்டிருந்த எதிர்நீச்சல் இந்த வாரம் 7.61 TRP புள்ளிகள் பெற்று மூன்றாவது வாரத்துக்குப் பின் தங்கியிருக்கிறது. 

கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த சன் டிவியின் 8 மணி தொடரான ‘சிங்கப்பெண்ணே’ 7.77 TRP பெற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.

முன்னேறும் ‘சிறகடிக்க ஆசை’… இந்த வார TRP டாப் 10!!

Top 10 serial TRP Rating

சன் டிவியில் தினமும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கயல்’ 7.48 TRP புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப்பிடிக்க, விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ தொடர் 7.46 புள்ளிகளுடன் ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தைக் காட்டிலும் பாக்கியலட்சுமி 7.19 டிஆர்பி-யில் இருந்து உயர்ந்திருக்கிறது. 

6.77 TRP புள்ளிகளுடன் ‘வானத்தைப்போல’ ஆறாவது இடத்தை பிடிக்க, விஜய் தொலைக்காட்சியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ 6.48 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ 6.28 புள்ளிகளுடன் டாப் டென்னில் இடம்பிடித்திருக்கிறது. ‘சுந்தரி’ 6.11 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடம்பிடிக்க, மல்லி 5.90 புள்ளிகளுடன் பத்தாவது இடம்பிடித்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.