சன் டிவி, விஜய் டிவிக்கு இணையாக சீரியல், ரியாலிட்டி ஷோ என தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சேனல் ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.
வள்ளியின் வேலன், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற புது சீரியல்கள் சில மாதங்களாக வந்த வண்ணம் உள்ளன. தற்போது மௌனம் பேசியதே என்று புது சீரியல் ஒளிபரப்பிற்கு காத்துக்கொண்டுள்ளது.

அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அசோக் இதற்கு முன்பு முருகா, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ப்ரோமோவில் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்ட ஜோடி, மற்றொரு ஜோடி விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு ஜோடியும் பேருந்தில் பயணம் செய்யும் போது எதிர்பாராத விபத்து காரணமாக இரண்டு ஜோடிகளும் மாறி தனது வாழ்க்கை துணையோடு சேரும்படி அமைகிறது. அதன் பின்னர் சுவாரஸ்யமான நிகழ்வுகள் தான் மௌனம் பேசியதே சீரியலின் கதை.
நாயகியாக நடிக்கும் ஜோவிதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த லிவிங்ஸ்டன் அவர்களின் மகள். வில்லனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் பின்னர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
ஜீ தமிழில் ஆரம்பமாகிறது குழந்தைகளுக்காக “Sa Re Ga Ma Pa Lil Champs” நிகழ்ச்சி.
லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா இதற்க்கு முன்பு “பூவே உனக்காக” சீரியல் மூலம் பிரபலமானவர். பின்னர் “அருவி” சீரியலிலும் நடித்தார். பூவே உனக்காக, அருவி போன்ற சீரியலில் நடித்து பெண்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வந்தார் ஜோகிதா.
மௌனம் பேசியதே சீரியல் திங்கள் – சனி வரை பகல் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இதற்க்கு முன்பு மதியம் 1.00 – 2.00 மணி வரை ஒளிபரப்பான இதயம் சீரியல் 1.30 – 2.30 மணிக்கு மாற்றப்படுகிறது.
சீரியல் | மௌனம் பேசியதே |
நடிகர்கள் | அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா |
ஒளிபரப்பு நேரம், மொழி | திங்கள் – சனி வரை பகல் 1.00 மணி, தமிழ் |
சேனல் | ஜீ தமிழ், |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]